[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமெரிக்காவின் வால்மார்ட் உள்பட இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS ரஜினியின் அரசியல் பிரவேசம் காலம் கடந்தது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து

“ஜடேஜாவை ஒரு இடத்தில் கூட நினைக்கவில்லை” - கோலி கூறும் பவுலிங்

when-we-looked-at-the-pitch-we-didn-t-think-about-jadeja-option-virat-kohli

இந்திய அணிக்கு 4 வேகப் பந்துவீச்சாளர்களே போதும் என தோன்றுவதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. இதனால் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது. நடந்த முடிந்த இரண்டாவது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 283 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 243 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 287 ரன்கள் என்ற இலக்கை எதிர்த்து விளையாடிய இந்திய அணி 140 ரன்களிலேயே சுருண்டு தோற்றது.

போட்டிக்கு பின்னர் பேசிய கேப்டன் விராட் கோலி, “நமது பந்துவீச்சாளர் சிறப்பாகவே பவுலிங் செய்தனர். களத்தில் விளையாடும் போது ஜடேஜா குறித்து நினைக்கவே இல்லை. 4 வேகப்பந்து வீச்சாளர்களே போதும் என நினைத்தோம். ஆஸ்திரேலியாவில் நாதன் லியான் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை கைப்பற்றினார். உண்மையை கூற வேண்டுமென்றால் நம் அணிக்கு ஸ்பின் பவுலர்கள் வேண்டும் என்ற எண்ணமே இல்லை. வெற்றிபெறாத போது, சிறப்பாக ஆடியவர்களை தரவரிசை படுத்தக்கூடாது. நாங்கள் எதிர்பார்த்த முடிவை பெறவில்லை. ஆனால் அடுத்த போட்டியில் ஒரு வெற்றியாளராக பேட்டி கொடுப்பேன் என நம்புகிறேன். 

இந்தப் போட்டி முழுவதும் ஒரு குத்துச்சண்டை போலவே சென்றது. இது ஒரு மறக்கமுடியாத போட்டியாக இருக்கும். டெஸ்ட் போட்டியில் நாங்கள் அடுத்த அடிக்கு முன்னேற நினைக்கிறோம். ஆஸ்திரேலியா எங்களை விட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக கடினமான பந்துவீச்சை எதிர்த்து அவர்கள் 330 ரன்கள் சேர்த்தனர். அதுவே அவர்களின் வெற்றிக்கு வழிவகுத்தது. மிட்டில் ஆர்டரில் விளையாடும் போது, குறைவு தான் என இலக்கு குறித்து நாம் யோசிப்பதில்லை. ஆனால் நாம் அவுட்டாகிய பின்னர் தான் தெரியும் இலக்கின் கடினம் குறித்து” என்று தெரிவித்தார்.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close