[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

“இங்கிலாந்தில் உங்கள் வீரம் எங்கு போனது?” - நெட்டிசன்கள் கேள்வி

india-vs-west-indies-1st-test-india-dominate-on-day-2-knock-west-indies-off-balance

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்திய அணியின் ஆட்டத்தை சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். பாராட்டு மழை பொழிவதற்கு அத்தனை காரணங்கள் இந்தப் போட்டியில் இருக்கத்தான் செய்கிறது. இளம் வீரர்கள் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். முதல் போட்டியில் விளையாடிய பிரித்வி ஷா 99 பந்துகளில் சதம் அடித்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். அச்சமில்லாத பேட்டிங்கை தொடருங்கள் என சச்சினே அவரை பாராட்டியுள்ளார். மற்றொரு இளம் வீரரான ரிஷப் பண்ட் 84 பந்துகளில் 92 ரன்கள் விளாசி தள்ளினார். டெஸ்ட் போட்டிகள் போல் அல்லாமல் டி20 போட்டியில் விளையாடுவதை போல் 4 சிக்ஸரும், 8 பவுண்டரிகளும் அடித்து நொறுக்கினார். 

            

அனுபவம் வாய்ந்த வீரர்களாக கேப்டன் விராட் கோலி, புஜாரா அசத்தினர். விராட் தனது 24வது சதத்தை பூர்த்தி செய்தார். ரகானே தன் பங்கிற்கு அனுபவம் வாய்ந்த பேட்டிங்கால் 41 ரன்கள் சேர்த்தார். கடைசி கட்டத்தில் நேர்த்தியாக பேட்டிங் செய்த ஜடேஜா முதன்முதல் சதத்தை பதிவு செய்தார். பிரித்வி ஷா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோரின் சதத்தால் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 649 ரன்கள் குவித்துள்ளது. பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் இரண்டாம் நாள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 94 ரன் எடுப்பதற்குள் 6 விக்கெட்களை சாய்த்துவிட்டனர். இத்தனை விஷயங்களை பதிவிட்டு ரசிகர்கள் மீம்ஸ்களை போட்டுவருகின்றனர். 

           

ஆனால், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தை ஒரு தரப்பு ரசிகர்கள் பாராட்டி வரும் அதேவேளையில், இங்கிலாந்து தொடரில் என்ன இத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என பலரும் விமர்சித்துள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய மோசமான தோல்வியை அடைந்தது. தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது.

             

தொடரில் விராட் கோலியை தவிர மற்ற வீரர்கள் மிகவும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ஒரு சீட்டுக்கட்டில் ஒரு சீட்டை எடுத்தால் கலைவதை போல் இந்திய பேட்ஸ்மேன் ஒவ்வொரு இன்னிங்சிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், பேட்டிங் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. வெளிநாட்டு மண்ணில் நடைபெற்றும் போட்டிகளில் இந்திய அணி சோபிப்பதில்லை என்ற விமர்சனம் மீண்டும் நிரூபணம் ஆனது. அதனால், இங்கிலாந்து தொடரை பதிவிட்டு தற்போதையை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியை பலரும் விமர்சித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close