[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி

தோற்றது ஏன்? விராத் கோலி விளக்கம்!

england-hit-the-right-areas-and-made-us-play-bad-shots-virat-kohli

இரண்டாவது டி20 போட்டியில், விரைவாக தொடக்க விக்கெட்டை இழந்துவிட்டதால் தோற்றுவிட்டோம் என்று இந்திய கேப்டன் விராத் கோலி கூறினார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது, இந்திய கிரிக்கெட் அணி. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி, மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்தது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் தனது மாயச் சுழலை பயன்படுத்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி, லோகேஷ் ராகுலின் அதிரடி சதத்தால் அபார வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான 2 வது போட்டி கார்டிப்பில் நேற்றிரவு நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராத் கோலி 47 ரன்களும் தோனி 32 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அலெக்ஸ் ஹேல்ஸ் 58 ரன்கள் எடுத்தார்.

போட்டிக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் விராத் கோலி, ‘முதல் மூன்று விக்கெட்டை நாங்கள் விரைவாக இழந்ததால் அதில் இருந்து மீண்டு வரமுடியவில்லை. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசினார்கள். எங்களுக்கு அழுத்தம் கொடுத்து விக்கெட்டை இழக்க வைத்தார்கள். பவர்பிளேயில் சிறப்பாக விளையாடவில்லை. நாங்கள் எடுத்த ஸ்கோர், எதிரணிக்கு சவாலான ஒன்றுதான். இருந்தாலும் இன்னும் 15 ரன்கள் அதிகம் எடுத்திருக்க வேண்டும். பிட்ச் உட்பட எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இருந்தாலும் சிறப்பாகவே ஆடினோம். இங்கிலாந்து வீரர்களின் பார்ட்னர்ஷிப் நன்றாக அமைந்துவிட்டது. இதற்காக அவர்கள் கடுமையாக உழைத்திருக்கிறாகள். குறிப்பாக குல்தீப் யாதவ் பந்துவீச்சை அவர்கள் சிறப்பாக கையாண்டார்கள். அதற்காக அவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். நாங்கள் நன்றாக போட்டியிட்டோம். இது சிறப்பான போட்டி. இங்கிலாந்து அணி, எங்களை விட சிறப்பாக ஆடி வென்றுவிட்டது’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close