[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

கேதர், டுபிளிசிஸ், முரளிவிஜய்... சிஎஸ்கே-வை வாட்டும் காயம்!

batting-worries-for-csk-ahead-of-big-homecoming

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்னணி வீரர்கள் காயமடைந்துள்ளதால் அந்த அணி கவலையில் இருக்கிறது.

பதினோறாவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நடந்துவருகிறது. முதல் போட்டியில் மும்பையை எதிர்கொண்ட சென்னை, திரில்லிங் வெற்றி பெற்றது. இந்நிலையில் சென்னை, அணி, சொந்தமண்ணில் கொல்கத்தா அணியை இன்று எதிர்கொள்கிறது. கொல்கத்தா அணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருக்கிறார். கொல்கத்தா அணியும் தனது முதல் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி தெம்பாக இருக்கிறது. 

இரண்டு அணியும் இரண்டு முறை கோப்பையை வெற்றிபெற்றுள்ளது. இரு அணிகளிலும் பலம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். கொல்கத்தா அணியில் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேன், அதிரடி காட்டி வருகிறார். கடந்த போட்டியில் அவர் அடித்த 50 ரன்கள் அணியின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 

சென்னை அணியை பொறுத்தவரை, காயம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் பயிற்சியின் போது அடைந்த காயத்தால் முதல் போட்டியில் விளையாடவில்லை. மிடில் ஆர்டரில் கலக்கும் அம்பதி ராயுடு ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார். மிடில் ஆர்டரில் கலக்கும் கேதர் ஜாதவ் முதல் போட்டியில் காயமடைந்தார். இதனால் அவர் தொடரில் இடம் பிடிப்பது கஷ்டம். டுபிளிசிஸும் காயமடைந்துள்ளதால், சிஎஸ்கே சரியான வீரரை தேர்ந் தெடுக்க தடுமாறி வருகிறது. 

இதுபற்றி சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளர் டேவிட் ஹசி கூறும்போது, ‘கேதர் ஜாதவ் திறமையான வீரர். காயமடைந்துள்ளதால் அவர் அணியில் இனி இடம் பிடிப்பது கஷ்டம். அவர் இல்லாதது அணிக்கு பின்னடைவுதான்’ என்றார். ஜாதவுக்கு பதில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் டேவிட் வில்லி-க்கு அணியில் இடம் பிடிக்கிறார்.

முரளி விஜய் காயம் குணமடைந்தால் இன்றைய போட்டியில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார். 

கடந்த போட்டியில் ’சின்ன தல’ சுரேஷ் ரெய்னாவும் தோனியும் ரசிகர்களை ஏமாற்றினார்கள். இன்றைய போட்டியில் ரெய்னாவின் அதிரடி சரவெடியை எதிர்பார்க்கலாம். ஆல்ரவுண்டர் பிராவோ முதல் போட்டியிலேயே ரன்மழை பொழிந்ததால் இந்தப் போட்டியிலும் அவர் கலக்குவார் என்று தெரிகிறது.

இரண்டு வருட தடைக்கு பின் களம் திரும்பி இருக்கும் சிஎஸ்கே, சொந்த ஊரில் வெற்றி பெற வேண்டும் என்று கடுமையாகப் போராடும். இதனால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

ஐ.பி.எல். போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் இதுவரை 16 முறை மோதி, சென்னை அணி 10 முறையும், கொல்கத்தா 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close