[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: ரபாடாவின் ஆக்ரோஷத்தில் பணிந்தது ஆஸி!

rabada-s-five-for-puts-south-africa-in-command

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 243 ரன்களில் ஆட்டமிழந்தது. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் நேற்று தொடங்கியது. தென்னாப்பிரிக்க அணியில் மோர்கலுக்கு பதிலாக லுங்கி நிகிடி சேர்க்கப்பட்டார்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் விக்கெட்டிற்கு 98 ரன்கள் எடுத்தது. பின்னர் சீரான இடைவெளியில்‌ ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெட்களை ‌பறிகொடுத்தனர். அந்த அணியில் டேவிட் வார்னர் அதிகப்பட்சமாக 63 ரன்களும் விக்கெட் கீப்பர் பெய்ன் 36 ரன்களும் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்க தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். நிகிடி 3 விக்கெட்டுகளையும் பிலாண்டர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. மார்க்ரம், கம்மின்ஸ் பந்துவீச்சில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். எல்கரும் ரபாடாவும் ஆடி வருகின்றனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close