[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தால் எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை: ஸ்டாலின்
 • BREAKING-NEWS ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு ஸ்டாலின் கண்டனம்
 • BREAKING-NEWS நாட்டில் தற்போது மின் பற்றாக்குறை என்பதே இல்லை: பிரதமர் மோடி
 • BREAKING-NEWS நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் சவுபாக்யா யோஜனா திட்டம் தொடக்கம்
 • BREAKING-NEWS மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் விரைவில் தேர்வு : அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்
 • BREAKING-NEWS நடிகர் சிவாஜி கணேசன் மணி மண்டபம் அக்டோபர் 1ஆம் தேதி திறப்பு
 • BREAKING-NEWS பதவியை தக்க வைத்துக் கொள்வதிலேயே ஆட்சியாளர்கள் குறியாக இருக்கிறார்கள்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அத்திப்பட்டு புதுநகர் அருகே சங்கமித்ரா விரைவு ரயில் மீது மின்கம்பி அறுத்து விழுந்தது
 • BREAKING-NEWS ஜெயலலிதா மறைந்ததும் அதிமுகவை சிறு சலசலப்பும் இல்லாமல் கட்டிக் காத்தவர் சசிகலா: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS வடகொரியா உள்பட 8 நாட்டுக்கு அமெரிக்கா தடை
 • BREAKING-NEWS செந்தில் பாலாஜி எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் 11 பேருக்கு வருமான வரித்துறை சம்மன்
 • BREAKING-NEWS ரூ.50,000க்கும் மேல் பட்டாசு வாங்க ஆதார் அவசியம்
 • BREAKING-NEWS டெல்லியில் பா.ஜ.க தேசிய செயற்குழு 2வது நாளாக ஆலோசனை
விளையாட்டு 05 Sep, 2017 08:16 PM

உயிரிழந்த காவல்துறை அதிகாரி மகள் கனவை நிறைவேற்றுகிறார் கவுதம் கம்பீர்!

gowtham-gambhir-dead-by-police-officer-s-daughter

ஜம்முகாஷ்மீர் கலவரத்தில் உயிரிழந்த காவல்துறை அதிகாரி மகளின் கல்விசெலவை ஏற்க கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் முன்வந்துள்ளார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அனந்தநாக் மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த கலவரத்தின்போது காவல்துறை அதிகாரி அப்துல் ரஷீத்  கொல்லப்பட்டார். அவரது இறுதி சடங்கின்போது  அவரது மகள் சோரா கண்ணீர் விட்டு கதறியது பலரது மனதை உருக்கியது. அந்தச்சிறுமி சிறுமி கதறி அழுத படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது அனுதாபத்தை பெற்றது. இந்நிலையில் சோராவின் கல்விச்செலவை கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ஏற்றுக்கொள்வதாகவும், அவரது டாக்டர் கனவை நிறைவேற்றி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  
இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், “சோரா, நான் உன்னை தாலாட்டுப்பாடி உறங்க வைக்க முடியாது, ஆனால் உன் கனவுகளை நீ வாழ நிச்சயம் உதவுவேன். வாழ்நாள் முழுதும் உன் கல்விக்காக நான் உதவி அளித்து ஆதரவளிப்பேன். இந்தியாவின் மகளான நீ உன் கண்களிலிருந்து கண்ணீரை பூமியில் சிந்த விடாதே. பூமித்தாய் கூட அதன் வலியின் சுமையைத் தாங்க மாட்டாள். உயிர்த்தியாகம் செய்த உன் தந்தை அப்துல் ரஷீத்துக்கு என் வீர வணக்கங்கள்”எனத் தெரிவித்துள்ளார். கௌதம் கம்பீருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவித்து வருகின்றன.
ஏற்கெனவே சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான சிஆர்பிஎஃப் வீரர்கள் 15 பேரின் குழந்தைகளுக்கான கல்விச்செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்து அவர்களுக்கு கவுதம் கம்பீர் உதவி வருகிறார். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close