[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

தோனியின் சாதனைகளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த இந்திய அணி வீரர்கள்

ms-dhoni-you-ve-been-an-inspiration-leader-anil-kumble-in-felicitation-ceremony

இந்திய அணியின் கேப்டனாக கடந்த பத்தாண்டுகள் பணியாற்றிய தோனிக்கு இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், வீரர்கள் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்த வெற்றிக்குப் பின்னர் ஹோட்டல் அறையில் கூடிய இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர் அனில் கும்ப்ளே உள்ளிட்டோர் தோனிக்கு நான்கு வெள்ளி நட்சத்திரங்கள் அடங்கிய மரத்தாலான நினைவுப் பரிசினை வழங்கினர். 2007 டி20 உலகக் கோப்பை வெற்றி, 2009-ல் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம், 2011 உலகக் கோப்பை வெற்றி மற்றும் 2013ம் ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பை வெற்றி ஆகிய 4 சாதனைகளைக் குறிக்கும்வகையில் நான்கு வெள்ளி நட்சத்திரங்கள் அடங்கிய நினைவுப் பரிசினை வீரர்கள் மற்றும் அணி நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய பயிற்சியாளர் கும்ப்ளே, கடந்த பத்தாண்டுகளாக இந்திய அணியின் கேப்டனாக தோனியின் சாதனைகள் அடுத்த தலைமுறையினருக்கு முன்மாதிரியாக அமைந்தது என்று பாராட்டுத் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close