[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

வாட்'அ ஐடியா சார்ஜி?..திருமண வீட்டாரை அடடே சொல்ல வைத்த ஹர்பஜன் சிங்..!

harbhajan-singh-gives-hilarious-shagun-suggestion-to-those-struggling-with-wedding-season

திருமண தம்பதிகளுக்கு பூங்கொத்து, மொய் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் கொடுப்பதை நாம் பார்த்திருப்பாம். ஆனால் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் திருமண தம்பதிகளுக்கு புதுவிதமான பரிசைக் கொடுக்க ஐடியா தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பணம் மற்றும் கள்ள பணத்தை ஒழிக்கும் நோக்கமாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து நாடெங்கும் சில்லறை தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்கள் அன்றாட வாழ்க்கையை ஓட்ட முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடைபெறும் வீடுகளிலும் மொய் வைப்பது என்பது மக்களுக்கு சிரமமாகியுள்ளது.

இந்நிலையில் விருந்தாளிகளிடம் இருந்து திருமண தம்பதிகள் எந்தவித பிரச்னையுமின்றி பணம் பெற, தம்பதிகளுக்கு கிரிடிட் கார்டு, டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்யும் இயந்திரத்தை பரிசாக கொடுக்கலாம் என ஹர்பஜன் சிங் ஐடியா கொடுத்துள்ளார். புதுமண தம்பதிகள் கார்டு ஸ்பைப் இயந்திரத்திடத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் தனது டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த சமயத்தில் இதுதான் சிறந்த பரிசுப் பொருளாக இருக்கும் என கூறியுள்ள ஹர்பஜன் சிங், நீங்க என்ன சொல்றீங்க தோழர்களே? எனவும் கேள்வி கேட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close