[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை அவதிக்குள்ளாக்க வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் எண்ணம் - கபில் சிபல்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 405 ரன்கள் வெற்றி இலக்கு

india-england-2nd-test

இந்தியா - இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், 4-வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளையின் போது இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 405 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.

கேப்டன் விராட் கோலி 56 ரன்களுடனும், ரஹானே 22 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில் இந்திய அணி இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. சீரான இடைவெளியில் இந்திய அணி வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். எனினும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 81 ரன்கள் குவித்த நிலையில் அடில் ரஷித் பந்தில் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து அணிக்கு 405 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் ஸ்டூவர்ட் பிராட், அடில் ரஷித் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close