[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

இந்திய டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்பட்டுவிட்டதா?: நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் விளக்கம்

new-zealand-says-business-as-usual-after-india-tour-cancellation-report

இந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்பட்டதாக வெளியான தகவலை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.

இதுதொடர்பான கேள்விக்குப் பதிலளித்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய செய்தித் தொடர்பாளர், இந்த தகவலை இப்போது தான் முதன்முறையாகக் கேள்விப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தூரில் வரும் 8ஆம் தேதி தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான வழக்கமான பயிற்சிகளை நியூசிலாந்து வீரர்கள் மேற்கொண்டுவருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

முன்னதாக, லோதா கமிட்டியின் பரிந்துரையை ஏற்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், அதனால் நடப்பு நியூசிலாந்து தொடரை ரத்து செய்யவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் ஆங்கில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close