[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

மஹிந்திரா நிறுவனரை அசத்திய ஸ்கார்ப்பியோ ஆட்டோ

inspired-mahindra-gives-four-wheeler-to-auto-driver

மிகச் சாதாரணமான விஷயத்தைக் கூட வித்தியாசமாகவும், பெரிதாகவும் செயல்படுத்துபவர்கள் அனைவரின் கவனத்தையும் பெறத் தவறுவதேயில்லை. Think Big என்னும் கருத்துக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக, கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சுனில், தனது ஆட்டோவின் பின்பக்கத்தை மஹிந்திரா நிறுவனத்தின் Scorpio காரைப் போலவே வடிவமைத்து அங்கிருக்கும் பொதுமக்களை அசத்தி வந்தார்.

இந்த Scorpio ஆட்டோ பரவலாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்த நிலையில், அனில் பணிக்கர் என்னும் நபர் இதை மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திராவிற்கு மென்சன் செய்துள்ளார். இதைப் பார்த்ததும் அசந்துபோன ஆனந்த் மஹிந்திரா, இந்த ஸ்கார்ப்பியோ ஆட்டோவை தனது நிறுவன ம்யூசியத்தில் வைக்க விரும்புவதாகவும், அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பரிசாக ஃபோர் வீலரை அளிக்க விரும்புவதாகவும் ட்விட்டரில் தெரிவித்தார்.

இதுகுறித்து நேற்று ட்வீட் செய்துள்ள மஹிந்திரா, “எங்கள் குழு, சுனிலைக் கண்டுபிடித்துவிட்டது. ஸ்கார்ப்பியோ ஆட்டோவை வாங்கிக்கொண்டு, ஃபோர் வீலரான “மஹிந்திரா சூப்பர் மினி ட்ரக்கை” அளித்திருக்கிறோம். இப்போது சுனில் ஒரு ஹேப்பியான வாகன உரிமையாளர்” என்று தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் தொழிலதிபர்களில், ஆனந்த் மஹிந்திரா முன்னணியில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close