[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு
  • BREAKING-NEWS மருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்
  • BREAKING-NEWS அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்
  • BREAKING-NEWS பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் டெல்லியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்திப்பு

போனை அன்லாக் செய்யும் வசதி நீக்கம் : கூகுள் அதிரடி !

android-users-can-no-longer-unlock-phones-with-ok-google

குரலை வைத்து போனை அன்லாக் செய்யும் வசதியை உடனடியாக நீக்க முடிவு செய்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் டிஜிட்டல் உலகில் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. சில போலி இணையதளங்களின் மூலம் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்படுவதும், ஏமாற்றப்படுவதும் தொடர்கதையாக  மாறி வருகிறது.

Image result for Android users can no longer unlock phones with ‘Ok Google’

இந்நிலையில் கூகுளின் குரலை வைத்து போனை அன்லாக் செய்யும் வசதியை உடனடியாக நீக்க முடிவு செய்துள்ளது. மோட்டோ Z மற்றும் பிக்சல் XL ஆகிய போன்களில் குரலை வைத்து போனை அன்லாக் செய்யும் முறை 9.27 அப்டேட்டிற்கு பிறகு நிறுத்தப்பட்டது.

Image result for Android users can no longer unlock phones with ‘Ok Google’இதனையடுத்து மற்ற ஆண்ட்ராய்ட் போன்களிலும் ஓகே கூகுள் என கூறி போனை அன்லாக் செய்யும் வசதியும் நீக்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. விரைவில் வெளியாகவுள்ள கூகுள் தயாரிப்பான பிக்சல் 3XL போனில் இந்த குரலை வைத்து போனை அன்லாக் செய்யும் வசதி நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்த பல்வேறு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி இந்த அன்லாக் வசதி நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close