[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ஏர்டெல்லின் புதிய அதிரடி ஆப்பர்.... இலவச வாய்ஸ் கால்

airtel-offered-unlimited-voice-calls-at-rs-345

ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் பல புதிய சலுகை திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 5-ம் தேதி அதிவேக 4ஜி இணையதள சேவை மற்றும் இலவச வாய்ஸ் கால் சேவையை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியது. அன்று முதல் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடுமையான போட்டியை சந்தித்து வருகின்றன. இதனை எதிர்கொள்ளும் விதமாக ஏர்டெல் பல சிறப்பு டேட்டா திட்டங்களை அறிவித்திருந்த நிலையிலும் ஜியோவை வெல்ல முடியவில்லை.

இதனை முறியடிக்கும் விதமாக ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இதன்படி, வாய்ஸ் கால் மற்றும் டேட்டா சிறப்பு விலையில் கிடைக்கின்றன. ரூ.145 க்கு 300எம்பி 4ஜி டேட்டாவும், அனைத்து ஏர்டெல் நம்பர்களுக்கும் இலவச உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும் வழங்கியுள்ளது.

மற்றொரு திட்டத்தில் ரூ.345க்கு 1 ஜிபி டேட்டாவும், இந்தியா முழுக்க அனைத்து நம்பர்களுக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் இலவச அழைப்புகளையும் வழங்குகிறது. அதுமட்டுமின்றி, இரு திட்டத்திற்கும் 4ஜி அல்லாத இண்டர்நெட் இணைப்பு வசதி கொண்ட பீச்சர்போன்களுக்கு 50எம்பி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த விலை டெல்லி வட்டாரத்திற்கு மட்டும் பொருந்தும் என்றும் மற்ற வட்டாரங்களின் விலையில் மாற்றங்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close