[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்
  • BREAKING-NEWS சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்
  • BREAKING-NEWS கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது
  • BREAKING-NEWS இலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

சீமான் அரசியலும் ரஜினியின் அரசியலும் ஒன்றா ? 

seeman-politics-and-rajini-s-politics-are-one

புதிய தலைமுறையின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

கேள்வி : நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு என்ன?

பதில் : போட்டியிடுவோம். 20 தொகுதி இடைத்தேர்தல் வந்தாலும், சட்டமன்ற தேர்தல் வந்தாலும், பாரளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடுவோம்.

கேள்வி: தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுமா? கூட்டணி வைக்குமா?

பதில் : எல்லோரும் மாற்றம் வர வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் மீண்டும் மாற வேண்டிய கட்சிகளோடு இணைய முடியாது. எல்லோரும் ஊழலை ஒழிப்போம். லஞ்சத்தை ஒழிப்போம் என கூறுகிறார்கள். யாருக்கும் ஊழல், லஞ்சம் பிடிக்கவில்லை. பின் யார் கொடுக்கிறார்கள் யார் வாங்குகிறார்கள் என்று கேட்டால் பதில் இருக்காது. மண்ணுக்கான அரசியல் செய்ய வேண்டும். தமிழ் அழிந்துவிட்டது என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். தேர்தலில் தனித்து தான் போட்டியிட போகிறோம்.

கேள்வி : தமிழ் அழிந்துவிட்டதா? 

பதில் : ஆம். நாட்டின் எந்த இடத்திலும் வழிகாட்டு பலகையில் நமது தாய் மொழி கிடையாது. மொழியை முதலில் மீட்க வேண்டும். மண்ணுக்கான அரசியல் செய்ய வேண்டும்.

கேள்வி : வேளாண்மை வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லையே?

பதில் : இல்லை. வேளாண்மையை அரசு கைவிட்டுவிட்டது. அரசிடம் எந்த திட்டமும் இல்லை. பண்ணைகள் வளர்பதை அரசு வேலையாக மாற்றலாம். இதனால் அரசுக்கு வருமானம் வரும். ஆனால் அரசு இதையெல்லாம் செய்யாமல் மதுக்கடையை நடத்துகிறது. நாட்டின் வளர்ச்சி எப்படி இருக்கும்?

கேள்வி : ஒட்டு மொத்தமாக நாடு வளர்ச்சி அடையடையவே இல்லை என்று சொல்ல முடியுமா?

பதில்: நான் பார்க்கும் வளர்ச்சி என்பது அனைத்து தரப்பட்ட மாணவர்களுக்கும் தரமான சமமான கல்வியை தரவேண்டும். அதைநோக்கிய பயணம் கிடையாது. தனிப்பட்ட தனியாரால் கல்வி தரத்தை தரமுடியும்போது அரசால் முடியாதா?

கேள்வி : உங்கள் கனவுத்திட்டத்தை அடைய அதிகாரம் தேவை. எந்தவொரு கூட்டணியும் இல்லாமல் 2 சதவீத வாக்குகளை வைத்து கொண்டு என்ன செய்வீர்கள்?

பதில் : உடனே வளர முடியாது. சிறிது சிறிதாகத்தான் வளர முடியும். சமரசம் செய்யாத போராட்டக்காரனா இருக்கணும்ன்னு நெனைக்கிறேன்.

கேள்வி : நீங்கள் கூட்டங்களில் வேடிக்கையாக பேசுவதால் நீங்கள் சொல்லும் நிறைய நல்ல விஷயங்கள் மறைக்கப்படுகிறதா?

பதில் : அவசியமாக இருப்பதால் வரலாற்றை பேசுகிறேன். உண்மையை பேசுகிறேன். அது சிலருக்கு வேடிக்கையாக இருக்கிறது. முழுக்க முழுக்க காழ்ப்புணர்ச்சியால் பேசுகிறார்கள்.

கேள்வி : புகைப்படம் எடுக்கவே பிரபாகரன் அனுமதிக்கவில்லை. என்ன பிரச்னை?

பதில் : அது தெரியவில்லை. எனக்கு காசு வருகிறது என்றால் உங்களுக்கும் வந்திருக்க வேண்டுமே. எனக்கு காசு கொடுக்கவா அவர்கள் வேலைக்கு போகிறார்கள். ஒரு இனத்தையே கொச்சைப்படுத்துகிறார்கள். என்னை அரசியல் களத்தில் இருந்து வெளியேற்ற சதி நடக்கிறது.

கேள்வி : புலிகள் அமைப்பை தவறாக பயன்படுத்துகிறார் சீமான் என்ற விமர்சனம் வைக்கப்படுகிறதே?

பதில் : புலிகளை பற்றி பேசினால் வளர்ந்து விட முடியும் என்றால் எனக்கு முன்னால் இருந்து பேசக்கூடியவர்கள் வளர்ந்து விட்டார்களா? இதில் என்ன அரசியல் இருக்கிறது.

கேள்வி : சபரிமலை குறித்து நீங்கள் பேசியது நிறைய விமர்சனங்களை சந்திக்கிறதே?

பதில்: ஆமாம். இங்கு இருக்கும் ஐயப்பனை பெண்கள் வழிபடுகிறார்கள். ஆனால் அங்கு செல்ல கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம். நியாயமான காரணத்தை சொல்லுங்கள். இதை வைத்து அரசியல் செய்யாதீர்கள். பெண்ணை தாண்டி இங்கு புனிதம் எதுவும் கிடையாது.

கேள்வி : சாதியை வைத்து அரசியல் செய்யக் கூடாது. மதத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது. ஆனால் இனத்தை வைத்து அரசியல் செய்யலாமா?

பதில்: மொழி, இனத்தை வைத்து தான் உலக அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கேள்வி : இதில் நீங்கள் சொல்லும் மனிதம் எங்கே இருக்கிறது?  

பதில் : சாதி, மதம் தேசியத்தின் பகைவன். ஆனால் மொழி, இனம் அனைவரையும் இணைக்கும். மொத்த அதிகாரத்தையும் ஒரே இடத்தில் குவிக்க கூடாது என்று சொல்கிறேன். அதிகாரத்தையும் நிர்வாகத்தையும் பரவலாக்கி விடு. இதுதான் எங்கள் நோக்கம். 

கேள்வி : சீமான் சொல்வதை மக்கள் ஏற்காத போது அது சரியான பாதையாக இருக்குமா?

பதில் : பத்தாயிரம் பேர் ஒரு பொய்யை உண்மை என்று சொன்னால் அது உண்மையாவதில்லை என புத்தர் சொல்கிறார். தனிமனித கருத்தை தள்ளி வைக்க முடியாது.

கேள்வி : சீமான் ஆன்மீக அரசியலை முன் வைக்கிறாரா?

பதில் : முருகன் எங்கள் முப்பாட்டன் என்பது உண்மை. அதை நான் மட்டும் சொல்லவில்லை. வைரமுத்து, பா.விஜய் போன்றோரும் சொல்கிறார்கள்.

கேள்வி : சீமான் வைக்கும் அரசியலும் ரஜினி வைக்கும் அரசியலும் ஒன்றா?

பதில் :அப்படியல்ல. அனைத்து உயிர்களுக்குமான தேவையும் அதை நிறைவேற்றுவதற்கான சேவையும் தான் அரசியல்.

கேள்வி : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு இருக்கும்?

பதில்: பணம் அதிகம் செலவு பண்றவங்களுக்கு தான் வெற்றி என்ற நிலையில் கள நிலவு உள்ளது. பார்க்கத்தான் போகிறீர்கள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close