[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

“ரெட் அலர்ட்” - அதிகாரிகளுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு

tamil-nadu-on-red-alert-for-very-heavy-rain-on-sunday

வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் ஆயத்த பணிகளை கண்காணிக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னை, புதுச்சேரியில் மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் புயலாகவும் மாறி வடமேற்கு திசையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தெற்கு வங்கக்கடலில் 8ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனால் 8ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் எனக் கூறிய அவர், சில இடங்களில் கன முதல் மிகக்கனமழை பெய்யக்கூடும் என்றார். சென்னையில் மிதமான மழையே இருக்கும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறினார். மேலும் ரெட் அலர்ட் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வானிலை ஆய்வு மையத்தின் ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ரெட் அலர்ட் - முதல்வர் உத்தரவு


:

கடலுக்குள் சென்றுள்ள மீனவர்கள் கரைதிரும்ப ஆட்சியர்கள் துரித நடவடிக்கை எடுக்க உத்தரவு 

மாநில பேரிடர் மூட்பு படை, தீயணைப்புத்துறை, காவல்துறை தயார் நிலையில் இருக்க வேண்டும்

நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும்

இதனிடையே, 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை நேற்று முதல் செயல்பட்டு வருவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. முதல்வர் உத்தரவு குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் பாதிப்புகளை 1077 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம். அதேபோல், 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். சென்னை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கக் கூடிய 205 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது. 

போட்டோ கேலரி

0 of 1

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close