[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை

கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்

congress-stakes-claim-to-form-government-in-goa-as-cm-manohar-parrikar-undergoes-treatment-at-aiims

கோவாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி உரிமை கோரியுள்ளது. கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் உரிமை கோரியுள்ளது. 

மொத்தம் 40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 16 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை. ஆனால், 14 இடங்களில் மட்டுமே வென்ற பாஜக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.

கோவா சட்டப்பேரவை நிலவரம்:-

பாஜக கூட்டணி:-

பாஜக - 14

மஹாராஷ்ட்ரவாடி கோமண்டக் கட்சி - 3
கோவா முன்னோக்கு கட்சி - 3
சுயேட்சை - 3
தேசியவாத காங்கிரஸ் கட்சி - 1

எதிர்க்கட்சி : காங்கிரஸ் - 16

முன்னதாக, ஆட்சி அமைக்க வாய்ப்பு அளிக்குமாறு ஆளுநர் மிரிதுலா சின்ஹாவிடம் கோவா காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. காங்கிரஸ் கட்சி தங்களது எம்.எல்.ஏக்கள் 16 பேரின் கையெழுத்து அடங்கிய உரிமை கோரும் கடிதத்தை ஆளுநர் மாளிகையில் அளித்துள்ளது. அந்தக் கடிதத்தில் கோவா அரசாங்கம் செயல்படவே இல்லை என்றும் தங்களுக்கு ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Read Also -> “என் அப்பாவும், முன்னாள் எம்எல்ஏவும் தான் காரணம்”... போட்டுடைத்த அம்ருதா..!  

          

Read Also -> ரூ.35க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் - பாபா ராம்தேவ் அதிரடி

ஆனால், காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க ஆளுநர் மிரிதுலா இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. ஆளுநர் மாளிகை வரை சென்று காங்கிரஸ் தலைவர்கள் திரும்பி விட்டனர். முன்னதாக, கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தது. ஆனால், அப்போது ஆளுநர் அவர்களை அழைக்கவில்லை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close