[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு

“நாட்டில் முஸ்லீம்களை காட்டிலும் பசுக்களே பாதுகாப்பாக உள்ளன” - சசிதரூர்

shashi-tharoor-it-seems-safer-in-many-places-to-be-a-cow-than-a-muslim

நாட்டில் பல இடங்களில் ஒரு முஸ்லிமை காட்டிலும் பசுக்களே அதிக பாதுகாப்புடன் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சசிதரூர், ‘தாம் ஒரு இந்து அல்ல என்றும் இந்த நாட்டில் இருக்க கூடாது பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்றும் கூறுவதற்கு இந்துத்துவவாதிகளுக்கு யார் உரிமை கொடுத்தது’ என்றும் கேள்வி எழுப்பினார். அதோடு, இந்து மதத்தில், தலிபான்களை போல அடிப்படை வாதத்தை கொண்டு வர நடைபெறும் முயற்சி நடக்கிறதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். அவரின் இந்தப் பேச்சுக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. பா.ஜ., மற்றும் இந்து அமைப்புக்கள் சார்பில் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 2019 மக்களவை தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால், இந்தியா இந்து பாகிஸ்தானாக மாறும் சூழல் உருவாகிவிடும் என்று சசிதரூர் கூறிய கருத்தை தொடர்ந்து இந்த சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில், நாட்டில் முஸ்லிம்களை காட்டிலும் பசுக்கள் பாதுகாப்பாக உள்ளன என்று சசிதரூர் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாட்டில் வகுப்புவாத கலவரங்கள் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர்கள் கூறுகிறார்கள். ஆனால், உண்மை அவ்வாறு இல்லை. நாட்டின் பல இடங்களில் முஸ்லிம்களை காட்டிலும் பசுக்களே பாதுகாப்பாக உள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார் சசிதரூர். மேலும், ‘தி பிரிட்’ இணைய செய்தியில் தான் எழுதிய கட்டுரையையும் அவர் ட்விட்டரில் இணைத்துள்ளார்.

                               

அதில், ஜூனைத் கான் என்ற 15 சிறுவன் அடித்து கொல்லப்பட்டது உட்பட கடந்த 4 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்களை பட்டியலிட்டுள்ளார். 4 ஆண்டுகளில் நாடு முழுவதும் 389 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், நூற்றுக் கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வார் மாவட்டத்தில் 28 வயதுடைய அக்பர் கான் என்ற இளைஞர் பசுக்களை கடத்தி செல்ல முயன்றதாக அடித்து கொல்லப்பட்ட நிலையில் சசிதரூர் இந்தக் கருத்தினை தெரிவித்துள்ளார்.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close