[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

வெல்லப்போவது தாமரையா? கையா? - கர்நாடகாவில் கடைசி நேர திருப்பங்கள்

stage-set-for-bjp-government-s-floor-test-in-karnataka-assembly

கார்நாடக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த அந்த நொடியில் இருந்து பரபரப்பு தொற்றிக் கொண்டது. கர்நாடக அரசியலில் நடைபெறும் அதிரடி திருப்பங்களை நாடே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அநேகமாக, கர்நாடக அரசியலில் நிலவி வரும் பரபரப்புக்கு இன்று மாலை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது.  

நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரையில் ஒவ்வொரு நிமிடமும் அவ்வளவு முக்கியத்துவம் வய்ந்ததாக உள்ளது. இதில், முக்கியமான விஷயம், பெருபான்மைக்கு குறைவான எம்.எல்.ஏக்களை கொண்டுள்ள பாஜக எப்படி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறப் போகிறது என்பதுதான். பாஜகவின் வியூகத்தில் இருந்து எப்படி தங்களது எம்.எல்.ஏக்களை காங்கிரஸ்-மஜத பாதுகாத்து நம்பிக்கை வாக்கெடுப்பை தோற்கடிக்க போகிறது என்பதையும் எல்லோரும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

சட்டசபையில் தற்போதைய எண்ணிக்கை:-

பாஜக     - 104
காங்கிரஸ் - 78
மஜத      - 38
சுயேட்சை  - 2

மொத்தம்   - 222

இதில், சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள கே.ஜி.போபையா அவை எண்ணிக்கையில் வரமாட்டார். தேவைப்பாட்டால் மட்டும் வாக்களிப்பார். அதேபோல், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற குமாரசாமிக்கு ஒரு வாக்கு மட்டுமே அவையில் உண்டு. இதானல், இரண்டு வாக்குகள் குறையும். இதனால், சட்டசபையில் இருக்கும் மொத்த எண்ணிக்கை 220. இதில் பெரும்பான்மைக்கு 111 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தேவை. அவையில் இருப்பவர்களை பொறுத்துதான் நம்பிக்கை வாக்கெடுப்பின் மெஜாரிட்டி தீர்மானிக்கப்படும். அவையில் இருப்பவர்களில் பாதிக்கு மேல் என்பது தான் நியதி.

              

என்ன நடந்தால் பாஜக வெற்றி பெறும்:-

1. காங்கிரஸ்-மஜத எம்.எல்.ஏக்களில் 14 பேர் குறைக்கப்பட்டால் தான், அவை எண்ணிக்கை 106 ஆக குறையும். அப்போது மெஜாரிட்டுக்கு தேவை 104 எம்.எல்.ஏக்களாக குறையும்.

2. காங்கிரஸ்-மஜத எம்.எல்.ஏக்களில் 14 பேர் அவைக்கு வராமல் இருக்க வேண்டும்

3. காங்கிரஸ்-மஜத எம்.எல்.ஏக்கள் 14 பேர் மாற்றி வாக்களிக்க வேண்டும் 

4. சட்டசபையில் அமளி ஏற்பட்டு 14 பேர் சபாநாயகரால் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் 

கட்சி தாவி வாக்களிக்கும் போது மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாக வாக்களிக்கப்பட்டால் அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டம் பாயும். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர வேறு எந்த அலுவல்களையும் செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதனால், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, சஸ்பெண்ட் நடவடிக்கை போன்றவை இருக்குமா என்பது சந்தேகம் தான். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close