[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு

பலமுறை மாமியார் வீட்டுக்குப் போனவன் நான்: டிடிவி தினகரன் அதிரடி

i-went-to-mother-in-law-many-times-dtv-dinakaran-action

நான் பலமுறை மாமியார் வீட்டுக்கு சென்று வந்தவன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
 
அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் துணைப்பொது செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி அரசை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்து விட்டோம் எனக் கூறியிருந்தார். இது குறித்து நேற்று அண்ணா 109வது பிறந்த கூட்டத்தில் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "எங்களை வீட்டுக்கு போக சொல்கிறார்கள். நான் வீட்டில் இருந்து கூட்டத்துக்கு வந்தேன். கூட்டம் முடிந்ததும் வீட்டுக்கு சென்றுவிடுவேன். ஆனால் அவர்  மாமியார் வீட்டுக்குதான் செல்லப்போகிறார். அது எந்த மாமியார் வீடு? என்று உங்களுக்கே தெரியும்" என்று பேசியிருந்தார். 

இதற்கு பதில் அளித்துப் பேசிய டிடிவி தினகரன், "நான் பலமுறை மாமியார் வீட்டுக்கு சென்று வந்தவன். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உறவினர்கள் பலர் ஏற்கெனவே சிறைக்கு சென்றவர்கள். அதோடு என் மீது சுமத்தப்பட்டுள்ள அன்னியச் செலாவணி வழக்கு ஊழல் வழக்கு அல்ல. முதலமைச்சர் தரப்பினர் ஊழல் செய்துவிட்டு அச்சத்துடன் இருக்கிறார்கள். சசிகலாவிற்கு துரோகம் செய்தவர் முதலமைச்சர் பழனிசாமி. முதலமைச்சர் பழனிசாமி தரப்பினர் அனைவரும் விட்டுக்கு செல்வது உறுதி" என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close