[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்
  • BREAKING-NEWS ஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்
  • BREAKING-NEWS தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30,000 கன அடியில் இருந்து 26,000 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS வேலூர்: ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில் சுமார் 5,000 வாழைகள் சாய்ந்தன

சசிகலாவுடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் நாளை சந்திப்பு

dhinakaran-support-mlas-with-sasikala-meet-tomorrow

பரபரப்பான அரசியல் சூழலில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் நாளை சந்திக்கின்றனர்.

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், புதுச்சேரியிலுள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். சுமார் 10 நாள்களுக்கும் மேலாக அவர்கள் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்களில் தங்கவைக்கப்பட்டனர். அங்கு, 'விண்ட்ஃப்ளவர்' மற்றும் 'தி சன்வே மேனர்' ஆகிய விடுதிகளில் மாறி மாறி தங்கவைக்கப்பட்டனர்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான ஜக்கையன் திடீரென எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தாவினார். இதனையடுத்து, மீதமிருக்கும் எம்.எல்.ஏ-க்கள், கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அங்குள்ள 'விண்ட்ஃப்ளவர்' ரிசார்ட்டில் தங்கியுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கதமிழ்ச்செல்வன், கதிர்காமு, மாரியப்பன் கென்னடி ஆகியோர் நாளை காலை 10 மணியளவில் சந்திக்க உள்ளனர்.

வருகின்ற செப்டம்பர் 14-ம் தேதி நேரில் ஆஜராகும்படி, தினகரன் அணி எம்.எல்.ஏ.,க்களுக்கு, சபாநாயகர் தனபால், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பின் போது தற்போது உள்ள சூழலில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close