[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

குஜராத்தில் 150: அமித் ஷாவின் கனவு நிறைவேறுமா?

150-in-gujarat-will-amit-shah-s-dream-come-true

குஜராத் மாநிலத்தில் அடுத்து நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி 150 இடங்களைப் பெற வேண்டும் என்பது அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவின் திட்டம். அதைச் செயல்படுத்தும் பொருட்டே தற்போதைய மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடிக்கும் முயற்சிகளில் பாரதிய ஜனதாக் கட்சி இறங்கியதாகச் சொல்லப்படுகிறது.

குஜராத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வரும் பாரதிய ஜனதாக் கட்சியின் செல்வாக்குப் படிப்படியாகக் குறைந்து வருவதாக செய்திகள் வெளியாகின. இதற்கு முக்கிய காரணம் அம்மாநிலத்தில் அண்மையில் படேல் சமூகத்தினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திய போராட்டங்கள். மாநில முதல்வர் பதவியில் இருந்து ஆனந்தி பென் படேல் விலகியதை அடுத்து மாநிலம் முழுவதும் கட்சியினர் மற்றும் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற தலைவர்கள் இல்லாததும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து கட்சியின் செல்வாக்கை மீட்டெடுக்க களம் இறங்கினார் தேசியத் தலைவர் அமித்ஷா. அவரது அதிரடி நடவடிக்கைகள் காரணமாக பாரதிய ஜனதா வலுப்பெற்றதோ இல்லையோ காங்கிரஸ் கலகலத்தது. காங்கிரஸின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சங்கர்சிங் வகேலா கட்சியில் இருந்து ஒதுங்கினார். இதனை அடுத்து ஆறு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகினர். அவர்களில் மூன்று பேர் பாரதிய ஜனதாவில் சேர்ந்தனர். அவர்களில் ஒருவரான பல்வந்த் சிங் ராஜ்புத்திற்கு மாநிலங்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்பட்டது.

இது காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு, அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் அகமது படேலின் வெற்றியையும் கேள்விக்குறியாக்கியது. இத்தகைய நடவடிக்கை மூலம் காங்கிரஸ் மீதான மக்களின் நம்பிக்கை குறையத் தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மாநிலத்தில் அண்மையில் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றியைக் குறிவைத்து எம்எல்ஏக்கள் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டதும் அக்கட்சி மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த அதிருப்திகளைப் பயன்படுத்தி அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி களம் இறங்கக் காத்திருக்கிறது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close