[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு

இலாகா இல்லாத முதல் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தானா?

is-jayalalithaa-the-first-chief-minister-to-hold-office-without-a-portfolio

நாட்டில் தற்போது இலாகா இல்லாத முதலமைச்சராக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இருக்கின்றனர்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அரசுப் பணிகளில் தொய்வு ஏற்படா வண்ணம் இடைக்கால ஏற்பாட்டினைச் செய்ய வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தின. இந்தநிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா கவனித்துவந்த துறைகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று ஆளுநர் அறிவித்துள்ளார். மேலும், இலாகா இல்லாத முதலமைச்சராக ஜெயலலிதா தொடருவார் என்றும், அவர் பூரண குணமடையும்வரை இந்த ஏற்பாடு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 166 உட்கூறு 3-ன் படி இந்த அறிவிப்பை ஆளுநர் வெளியிட்டார்.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 166-ன் உட்கூறு 3 சொல்வது என்ன?:

இதன்படி, மாநில அரசின் செயல்பாட்டில் தொய்வு ஏற்படாமல் இருக்க ஆளுநர் விதிகளை வகுக்க முடியும். இதற்காக அமைச்சர்களின் இலாகாக்களையும் அவர் மாற்ற முடியும். நிர்வாகம் இயங்கத் தேவையான நடவடிக்கைகளை ஆளுநர் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்கள் மூலம் எடுக்கலாம்.

இலாகா இல்லாத அமைச்சர்:

இலாகா இல்லாத அமைச்சர் எந்த துறையின் பணிகளையும் கவனிக்க வேண்டியதில்லை. அதேநேரம் அமைச்சருக்கு உண்டான அதிகாரம் மற்றும் சலுகைகள் அனைத்தும் அவருக்கு அளிக்கப்படும். இதேபோன்றதொரு நிலை கடந்த 1984-85ஆம் ஆண்டில் தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி வகித்தபோது ஏற்பட்டது. உடல்நலக்குறைவால் அமெரிக்க மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். அனுமதிக்கப்பட்ட போது, அவர் நிர்வகித்து வந்த துறைகளை அப்போதைய நிதியமைச்சர் வி.ஆர்.நெடுஞ்செழியன் கவனிப்பார் என்று ஆளுநர் கே.எல்.குரானா அறிவித்தார். மேலும், அமைச்சரவைக் கூட்டங்களுக்கும் நெடுஞ்செழியனே தலைமை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 1987-ல் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் பொறுப்பு முதலமைச்சராகவும் நெடுஞ்செழியன் செயல்பட்டார். கடந்த 1969-ல் திமுக ஆட்சியின்போது அப்போதைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா மறைந்தபோதும் இதே நெடுஞ்செழியன் தான் பொறுப்பு முதல்வர் பதவி வகித்தார்.

தமிழகத்தில் மட்டுமல்ல மத்தியிலும் இலாகா இல்லாத அமைச்சராக சிலர் பொறுப்பு வகித்த வரலாறுகளும் உண்டு. கடந்த 1962ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக டி.டி.கிருஷ்ணமாச்சாரி பொறுப்பேற்றார். இதேபோல நேரு அமைச்சரவையில் 1964 ஜனவரி முதல் ஜூன் முதல் லால் பகதூர் சாஸ்திரி இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். நேரு மறைவுக்குப் பின்னர் அவர் பிரதமராகப் பதவியேற்றார். கடந்த 2003ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் மம்தா பானர்ஜிக்கு நிலக்கரித் துறை ஒதுக்கப்பட்டபோது, அதை அவர் ஏற்காத நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகித்தார். மேலும், தற்போதைய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், 2004-ல் அமைந்த மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் முதலில் இலாகா இல்லாத அமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர் அவருக்கு தொழிலாளர் நலத்துறை ஒதுக்கப்பட்டது. கடந்த 2005-ல் வெளியிடப்பட்ட ஐ.நா.வின் வோல்கர் கமிட்டி அறிக்கையில் இந்தியா-ஈராக் இடையிலான உணவுக்கு எண்ணெய் திட்டத்தால் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் குற்றம்சாட்டப்பட்டார். இதனால் அவரிடமிருந்த வெளியுறவுத் துறை பறிக்கப்பட்டு இலாகா இல்லாத அமைச்சராக அவர் பதவியில் நீடித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close