[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

‘என்சிபி கட்சியைச் சேர்ந்தவரே முதல்வர்’ - காங்கிரசின் புதிய செக்..!

congress-wants-ncp-cm-with-shiv-sena-support-say-party-sources

காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசித்த பிறகே ஆட்சி அமைப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் அதிக இடங்களை பெற்ற கட்சியான பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால் போதிய ஆதரவு கிடைக்காததால் பாஜக அதனை நிராகரித்தது. இதனையடுத்து ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை திரட்டும் முயற்சியில் சிவசேனா நேற்று ஈடுபட்டது. 

                      

தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இருகட்சிகளும் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், சிவசேனா தலைவர்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். சந்திப்பின் போதும் ஆட்சி அமைப்பதற்கு கூடுதல் கால அவகாசத்தை வழங்குமாறு அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், ஆதரவு எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் கொடுக்கப்படவில்லை எனக் கூறி கூடுதல் அவகாசம் வழங்க ஆளுநர் மறுத்துவிட்டார். 

                        

அதனையடுத்து, பாஜக, சிவசேனாவை தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் பகத் சிங் கோஷாரி நேற்றிரவு 8.30 மணியளவில் அழைப்பு விடுத்தார். என்சிபி தலைவர்களும் நேற்றிரவே ஆளுநரை சந்தித்தனர். அப்போது, இன்றிரவு 8.30 மணி வரை ஆட்சி அமைக்க என்சிபிக்கு ஆளுநர் நேரம் வழங்கினார்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் முதல்வர் ஆக வேண்டும் என்றும் அதற்கு சிவசேனா ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில், சிவசேனாவை ஆதரிப்பதில் காங்கிரஸ் கட்சியிலே இருவிதமான கருத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்தால் சித்தாந்த ரீதியாக வலதுசாரி கண்ணோட்டத்தை ஆதரித்ததாக ஆகிவிடும் என சில காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர்.

                             

இதனிடையே, காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசித்த பிறகே ஆட்சி அமைப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் கூறியுள்ளார். “நேற்றுவரை காங்கிரஸ் கட்சியின் முடிவுக்காக காத்திருந்தோம். ஆனால், வரவில்லை. அவர்களை கலந்து ஆலோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்க முடியாது” என்றார் அவர்.

                      

முதல்வர் பதவிக்காகத்தான் பாஜக உடன் இணைந்து ஆட்சி அமைக்க மறுத்ததோடு, தற்போது என்சிபி கேட்டுக் கொண்டதற்கு இணங்க மத்திய அமைச்சர் பதவியையும் சிவசேனா ராஜினாமா செய்துவிட்டது. ஆனால், தற்போது அந்த முதல்வர் பதவிக்கே காங்கிரஸ் செக் வைத்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close