[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

காதலுக்கு எதிர்ப்பு: அம்மாவைக் கொன்று வீட்டில் மறைத்து வைத்த மாணவி

hyderabad-woman-killed-mother-stowed-body-at-home-for-days

காதலனுடன் சேர்ந்து அம்மாவைக் கொன்று 3 நாட்களாக வீட்டில் பதுக்கிய மகள் கைது செய்யப்பட்டார்.

ஐதராபாத்தில் உள்ள ஹயத்நகரை சேர்ந்தவர் சீனிவாஸ். லாரி டிரைவர். இவர் மனைவி ரஞ்சிதா. இவர்கள் மகள் கீர்த்தி. கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு சீனிவாஸ் லாரிக்கு சென்றுவிட்டார். நான்கு நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்தார். மனைவி ரஞ்சிதாவைக் காணவில்லை. மகளிடம் கேட்டார். ‘நான் விசாகப்பட்டினத்துல இருந்தேன். எனக்குத் தெரியாது’ என்றார் மகள். பின்னர் இரண்டு பேரும் போலீஸ் ஸ்டேஷன் சென்று, ரஞ்சிதாவைக் காணவில்லை என்று புகார் கொடுத்தனர்.

இதில், தனது அப்பா மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் குடித்துவிட்டு அம்மாவை அடிப்பார் என்றும் போலீசிடம் கூறினார் கீர்த்தி.

இதனால் விசாரணையை சீனிவாஸிடம் இருந்து போலீஸ் தொடங்கினர். இதற்கிடையே ரமணாப்பேட் அருகே, ரயில் தண்டவாளத்தின் அருகில் அழுகிய நிலையில் ஓர் பெண் உடல் கிடந்தது. ரயில்வே போலீசார் அதைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அது, ரஞ்சிதாவின் உடல் என தெரிந்ததை அடுத்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மகள் கீர்த்தி மீது போலீசுக்கு சந்தேகம் வலுத்தது. அவர் நடவடிக்கையை வைத்து விசாரணையை தீவிரமாக்கினர். அப்போது காதலனுடன் சேர்ந்து அம்மாவைக் கொன்றதை ஒப்புக்கொண்டார் கீர்த்தி.

கீர்த்தி, அவர் வீட்டுக்கு அருகில் உள்ள சஷி என்ற வாலிபரை காதலித்து வந்தார். இதனால் பாதி நேரம் அவருடன் செலவழித்துவிட்டு லேட்டாகத்தான் வீட்டுக்கு வருவாராம். இதை அம்மா ரஞ்சிதா ஏற்கவில்லை. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். கடந்த சில நாட்களுக்கு முன்னும் இதே போல தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கீர்த்தி, அம்மாவை கொன்றுவிட முடிவு செய்தார். இதையடுத்து அவர் தூங்கும்போது காதலன் சஷியை வீட்டுக்கு அழைத்தார்.  அவர் ரஞ்சிதாவின் கை, கால்களை நன்றாக அழுத்திப் பிடித்துக் கொள்ள, கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார் கீர்த்தி. பின்னர் உடலை மூன்று நாட்களாக வீட்டிலேயே மறைத்து வைத்துள்ளனர். 

உடலில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அதை காதலனோடு கொண்டு சென்று ரயில் தண்டாவாளத்தில் போட்டு விட்டு வந்துள்ளார் கீர்த்தி. போலீசார் விசாரணையில் இந்த தகவல்கள் வெளி வந்தன.

பெற்ற மகளே காதலுக்காக, அம்மாவை கொன்ற சம்பவம் அவர்கள் உறவினர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close