[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச நவ.29 இந்தியா வருகை
  • BREAKING-NEWS ரஜினி, கமல், விஜய் சேர்த்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS அவசியம் ஏற்பட்டால் நானும், ரஜினியும் இணைவோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி - புதினுடன் நாளை ஆலோசனை

pm-modi-leaves-for-russia-to-hold-annual-summit-with-vladimir-putin

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா புறப்பட்டு சென்றார். இந்த பயணத்தின் போது சென்னைக்கும் ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் நகருக்கும் இடையே கடல் வழியை தொடங்குவது குறித்து ரஷ்ய அதிபருடன் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

டெல்லியிலிருந்து இன்று மாலை தனி விமானம் மூலம் ரஷ்யா புறப்பட்ட பிரதமர் மோடி நாளை விளாடிவாஸ்டாக் நகரில் நடைபெறும் இந்தியா ரஷ்யா ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்கும் பிரதமர் மோடி, சென்னைக்கும் ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் நகருக்கும் இடையே கடல் வழியை தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்துகிறார். 

               

கச்சா எண்ணெய்க்காக இந்தியா பெரும்பாலும் வளைகுடா நாடுகளையே சார்ந்திருக்கும் நிலையில், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, புதினுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் இருவரும் ரஷ்யாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும் தளத்தையும் பார்வையிடுகின்றனர். 

நாளை மறுநாள் நடைபெறும் கிழக்கத்திய பொருளாதார பேரவையின் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மாநாட்டின் இடையே பலநாட்டுத் தலைவர்களை தனியே சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிரதமரின் இந்த பயணம் 36 மணி நேரம் கொண்ட குறுகிய கால பயணம் என வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close