[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

கேரளாவில், பூட்டை உடைத்து கன்னியாஸ்திரியை மீட்ட போலீசார்!

fir-against-convent-for-locking-up-sister-lucy-kalapurakkal

கேரளாவில், சிறைவைக்கப்பட்ட கன்னியாஸ்திரியை, பூட்டை உடைத்து போலீசார் மீட்டுள்ளனர். இதுதொடர்பாக திருச்சபை கான்வென்ட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்த முன்னாள் பிஷப் ஃபிராங்கோ முல்லக்கல், கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். முன்னதாக, பிஷப் ஃபிராங்கோவை கைது செய்யக்கோரி கன்னியாஸ்திரிகள் பலர் போராட்டம் நடத்தினர். இதில், கன்னியாஸ்திரி லூசி களப்புராவும் (53) பங்கேற்றார். இதன் காரணமாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
திருச்சபை அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

அதில், ’தனியாக கார், வீடு வாங்கி வாழ்ந்து வருகிறீர்கள். இதற்காக வங்கி கடனும் பெற்றுள்ளீர்கள். அனுமதியின்றி புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறீர்கள். உடை கட்டுப்பாட்டையும் மீறியுள்ளீர்கள். சமூக வலைத்தளங்கள் மற்றும் மீடியாவில் பேசியும் பத்திரிகைகளில் எழுதியும் வருகிறீர்கள். இது திருச்சபை விதிகளுக்கும் மதக் கோட்பாட்டுக்கும் எதிரானது’ என்று கூறி, விளக்கம் கேட்டது. அதற்கு அவர் விளக்கம் அளித்திருந்தார். அது திருப்திகரமாக இல்லை என்று கூறி, திருச்சபையில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

இதுதொடர்பாக கன்னியாஸ்திரியின் தாய்க்கு திருச்சபை அனுப்பிய கடிதத்தில், ’’லூசியை சபையில் இருந்து நீக்கிவிட்டோம். கடிதம் கிடைக்கப்பெற்ற 10 நாட்களுக்குள் லூசியை அழைத்து செல்ல வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தனர்.


இந்நிலையில் கன்னியாஸ்திரி லூசி, நீக்கத்துக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபையின் தலைமை பீடமான, வாடிகன் திருச் சபையில் முறையிட்டுள்ளார்.

இந்நிலையில், தான் தங்கியிருந்த கான்வென்டில் இருந்து நேற்று காலை பிரார்த்தனைக்கு செல்வதற்காக வெளியே வர முயன்றார். கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அவர், தான் சிறை வைக்கப்பட்டிருப்பதாக வெள்ளமுண்டா போலீசுக்கு புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து பூட்டை உடைத்து கன்னியாஸ்திரியை மீட்டனர். இதுதொடர்பாக அவர் தங்கியிருந்த கான்வென்ட் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close