[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் முதல் இரு இடங்களைப் பிடித்த கணவன் மனைவி!

brilliant-couple-achieved-success-in-chattisgarh-psc-examination

சத்தீஸ்கர் மாநில அரசு பணியாளர் தேர்வாணைய முடிவுகளில் ஒரு ஆச்சர்யம் அரங்கேறியுள்ளது. 

சத்தீஸ்கர் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு முடிவுகள் வழக்கமானதாக இருந்தாலும் முதலிடம் மற்றும் இரண்டாவது இடத்தைப் பிடித்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதுவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் மனைவி என்ற அதிசயம் நிகழ்ந்துள்ளது. பிலாஸ்பூர் நகரில் வசித்து வரும் கணவர் அபினவ் ‌சிங் முதலிடமும் மனைவி விபா சிங் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். 10 வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி என மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கிறார் அபினவ் சிங்.

2008ஆம் ஆண்டு அபினவ் சிங், விபா சிங் ஒரே பயிற்சி மையத்தில் இணைந்து பயின்றுள்ளனர். நண்பர்களாக பழகி வந்த இவர்கள் இருவரும் இடையே காதல் மலர்ந்த நிலையில் 2014ஆம் ஆண்டு பெற்றோரின் சம்மத்துடன் திருமணம் செய்துகொண்டனர். முன்னதாக இருவரும் சத்தீஸ்கர் மாநிலத்தின் வெவ்வேறு பகுதியில் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிகளாக பணியாற்றிக்கொண்டிருந்தனர். பயிற்சி வகுப்பில் எதற்காக சேர்ந்தார்களோ அந்த இலக்கை எட்ட இருவரும் கடினமாக உழைத்தனர். விடா முயற்சியால் கணவருடன் இணைந்து படித்த விபா வெற்றி இலக்கை எட்டியுள்ளார்.

கணவர் அபினவ் சிங் 298.37 மதிப்பெண்களும் மனைவி விபா சிங் 283.91 மதிப்பெண்களும் பெற்றனர். வாழ்க்கை என்பது ஒன்றுதான் அதில் எது வேண்டும் என்று நிர்ணயம் செய்யுங்கள், அச்சப்படவேண்டாம், நேர்மையாக இருந்தால் பலன் கிடைக்கும் இதுவே எங்கள் தாரக மந்திரம் என வெற்றி ஜோடி தெரிவிக்கின்றனர்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close