[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி

’மோடி விமானம் பறக்க அனுமதி வேண்டும்’: பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை

india-asks-pakistan-to-exempt-narendra-modi-s-flight

இந்திய விமானங்கள் தங்கள் வான்பரப்பை பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் விமானத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பாகிஸ்தானிடம் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானங்கள் தங்கள் வான்பரப்பில் பறக்க பாகிஸ்தான் தடை விதித்தது. அந்த தடையை வரும் 15ஆம் தேதி வரை சமீபத்தில் நீட்டித்தது. 

இந் நிலையில் வரும் 13ஆம் தேதி பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க விமானம் மூலம் கிர்கிஸ் தானுக்கு செல்ல இருக்கிறார். பாகிஸ்தான் வழியே சென்றால் 4 மணி நேரத்தில் கிர்கிஸ்தானை அடையலாம். வேறு வழியில் சென்றால் 8 மணி நேரம் ஆகும். எனவே பிரதமர் செல்லும் விமானத்துக்கு பாகிஸ்தான் வான்பரப்பில் அனுமதி அளிக்க வேண்டும் என இந்தியா கேட்டுள் ளது. 

ஏற்கனவே சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவு துறை அமைச்சராக இருந்த போது பாகிஸ்தான் அரசு அவரது விமானம் செல்ல அனுமதி அளித்திருந்தது. அதே போல பாகிஸ்தான் அமைச்சரின் விமானம் இந்தியா வழியே செல்ல மத்திய அரசும் அனுமதித்திருந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close