[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி திட்டம் : மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

the-central-government-has-issued-announcement-to-provide-6000-rupees-annually-to-the-farmers

நடப்பு நிதியாண்டு முதல் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

நடப்பு ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில் ஐந்து ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக இரண்டாயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல் தவணை‌யாக இரண்டாயிரம் ரூபாயை வழங்குவதை பிரதமர் மோடி டிஜிட்டல் முறையில் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரப்பிரதேசத்தில் தொடங்கி வைத்தார். டிஜிட்டல் முறையில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக 2 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது.

Related image

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு பாஜக அளித்த தேர்தல் அறிக்கைகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். இந்த சூழலில் கடந்த 31ஆம் தேதி நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான 17 வது மக்களவையின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் தேர்தல் அறிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

Related image

இதனைதொடர்ந்து இந்த திட்டத்தின் மூலம் 14 புள்ளி 5 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான அறிவிக்கையை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவர் பட்டியலை தயார் செய்யுமாறு மாநில அரசுக்கு மத்திய விவசாயத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close