[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

7 பேர் விடுதலை விவகாரம் ! சட்ட நிபுணர்கள் கருத்துக்காக ஆளுநர் காத்திருப்பு

purohit-awaits-legal-view-on-rajiv-case-convicts

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்ட நிபுணர்களின் கருத்தை பெற ஆளுநர் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து, தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் அத்தீர்மானம் ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே 7 பேரின் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதுபோல 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்தார்.

தற்போது 7 பேரின் விடுதலை குறித்த முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளுநரின் கையிலேயே உள்ளது. ஆளுநர் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு 7 பேரை விடுதலை செய்து உத்தரவிட வேண்டும் என பல தரப்பில் இருந்து குரல்கள் ஒலித்து வருகின்றன. இந்நிலையில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்ட நிபுணர்களின் கருத்தை பெற ஆளுநர் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகம் சாராத மற்ற மாநில சட்ட நிபுணர்களின் கருத்தை பெற முயலும் ஆளுநர், அதனை பொறுத்து 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்கலாம் என கூறப்படுகிறது.

7 பேரின் விவகாரத்தில் மத்திய அரசானது விடுதலைக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே உள்ளதாக தெரிகிறது. கடந்த 6 மாதத்திற்கும் முன்பு கூட, இவ்விவகாரம் கலந்து ஆலோசிக்கப்பட வேண்டும் என ஆளுநரிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில்  ஆளுநர் மத்திய அரசின் நிலைப்பாட்டை கவனத்தில் கொள்ளாமல், சுயமாக தன் முடிவை எடுக்கலாமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. அதேநேரம் இந்தியா- இலங்கை இடையிலான உறவிலும் இவ்விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலும் மத்திய அரசுடன் ஆளுநர் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளதாக கூறப்படுகிறது.

சிறையில் உள்ள 7 பேரில் 4 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள். அவர்கள் சிறை சென்றதிலிருந்து தற்போதைய நாள் வரை அவர்களை திரும்ப இலங்கைக்கு கொண்டுவருவதில் அந்த நாடு தீவிரம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே சட்ட நிபுணர்களின் முழுமையான ஆலோசனைக்கு பிறகே ஆளுநர் இவ்விவகாரத்தில் முடிவெடுப்பார் எனத் தெரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close