[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

“நீரில் இயங்கக்கூடிய புதிய இன்ஜின்” - ஜப்பானில் ஒரு தமிழர் சாதனை

tn-engineer-invents-engine-that-uses-hydrogen-releases-oxygen

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தண்ணீர் மூலம் இயங்கக்கூடிய இன்ஜினை கோயம்புத்தூரை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.

புத்தகங்களை அப்படியே மனப்பாடம் செய்யாமல் புரிதலுடன் படிக்க வேண்டும். அப்போதுதான் பட்டறிவு வரும் என மாணவர்களை ஆசியர்கள் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒரு இளைஞர் புது முயற்சியாக புதிதாக எதையாவது கண்டுபிடித்தால் முதலில் நக்கலும், நையாண்டியுமே அவர் மீது வந்து விழும். அவரின் முயற்சியை  பாராட்ட யாரும் முன்வர மாட்டார்கள். அப்படித்தான் கோவையைச் சேர்ந்த சௌந்திரராஜன் குமாரசாமி என்பவரின் புதிய முயற்சிக்கு இந்தியாவில் போதிய அங்கீகாரம் கிடைக்காமல் போனதால், அவர் ஜப்பானை நாடி வெற்றியும் பெற்றுள்ளார்.

மெக்கானிக்கல் இன்ஜினியரான சௌந்திரராஜன் குமாரசாமி என்பவர், கடந்த 10 ஆண்டுகளாக கடின உழைப்பு மேற்கொண்டு புதிய வகை இன்ஜின் ஒன்றை வடிவமைத்துள்ளார்.  (Distilled water) நீரால் இயங்கக்கூடிய இந்த இன்ஜினானது, சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஹைட்ரஜனை எரிபொருளாக எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடும் வகையில் இந்த இன்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சௌந்திரராஜன் குமாரசாமி கூறும்போது, “ நான் வடிவமைத்த இன்ஜினை இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே என் கனவு. இதற்காக நான் பல முயற்சி செய்தேன். பல அதிகாரிகளின் கதவுகளை தட்டிப் பார்த்தேன். ஆனால் எந்தவொரு இடத்தில் இருந்தும் நல்ல பதில் கிடைக்கவில்லை. இதனாலேயே ஜப்பான் நாட்டை நாடினேன். அவர்கள் இந்த இன்ஜினை அங்கு அறிமும் செய்ய வாய்ப்பு கொடுத்தார்கள். வரும் நாட்களில் இந்த இன்ஜின் ஜப்பானில் அறிமுகம் செய்யப்படும். இந்தியாவிலும் என் இன்ஜினை அறிமுகம் செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close