[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கூட்டம் தொடக்கம்

state-chief-electoral-officers-meeting-starts-in-delhi

மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து  தலைநகர் டெல்லியில் ‌இன்றும்,‌ நாளையும் தேர்தல் ‌‌ஆணைய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடையவுள்ளது. எனவே ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன் ஏற்பாடுகள் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடனான இரண்டு நாட்கள் கருத்தரங்கிற்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. 

Image result for தேர்தல் ‌‌ஆணைய

இதற்காக இன்றும் நாளையும் தலைநகர் டெல்லியில் தேர்தல் ‌‌ஆணைய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன், தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை நடத்துகிறது. இதனிடையே பாரதிய ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில், மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் வியூகங்கள், பரப்புரை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா உரையாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது நாள் கூட்டத்தில் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close