[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்

actor-sruthi-hariharan-accused-arjun-sarja-of-sexual-harassment-on-saturday-which-she-claimed-happened-on-the-sets-of-the-2016-film-vismaya

நடிகர் அர்ஜுன் தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கன்னட நடிகை ஒருவர் மீ டூவில் கருத்து தெரிவித்துள்ளார். 

மீ டூவில் நாடு முழுவதும் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் ரீதியான பிரச்னைகளை பெண்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் வைரமுத்து மீது பாடகி சின்மயி புகார் தெரிவித்தார். இந்நிலையில், தற்போது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் படப்பிடிப்பின் போது அத்துமீறி நடந்து கொண்டதாக மீ டூவில் கூறியுள்ளார். 

ஸ்ருதி ஹரிஹரன் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்ட கருத்தில், “மீடூ இயக்கம் எங்களுக்கு சுதந்திரமாக பேசுவதற்கு தகுந்த சூழலை உருவாக்கியுள்ளது. பாலியல் புகார்களை முன் வந்து சொல்வதற்கு தைரியம் தந்துள்ளது. பலமுறை நான் பாலியல் அத்து மீறல்களுக்கு உள்ளாகியுள்ளேன். வளரும் கலைஞர்களுக்கு வரும் அதே பிரச்னைதான் எனக்கும் வந்தது. தேவையில்லாத ஆபாசப் பேச்சுக்கள், வக்கிர செய்கைகள் என நான் பல அத்துமீறல்களை சந்தித்துள்ளேன். இதனால் நான் பலமுறை அசவுகரியமாக உணர்ந்துள்ளேன். ஆனால், தொடர்ச்சியாக உடல் ரீதியாக, மனரீதியாக இத்தகைய தொந்தரவுகளில் இருந்து தப்பித்து வந்தேன். ஆனால் 2016 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் என்னை மனரீதியாக பாதித்து விட்டது. 

       

நடிகர் அர்ஜுன் உடன் இருமொழியில் தயாராகும் படமொன்றில் அப்போது நடித்துக் கொண்டிருந்தேன். அவருடைய படங்களை பார்த்துதான் நான் வளர்ந்தேன். அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போது அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தேன். படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்கள் இயல்பாகவே சென்றது. படத்தில் அவருடைய மனைவியாக நடத்தேன். எங்களுக்கு இடையே ஒரு ரொமாண்டிக் காட்சி ஒருநாள் படமாக்கப்பட்டது. ஒரு நீண்ட வசனம் பேசிய பிறகு, இருவரும் கட்டிப் பிடிக்க வேண்டியிருந்தது. 


 
அப்போது ஒத்திகையின் போது, நாங்கள் எங்கள் வசனங்களை பேசிப் பார்த்தோம். அர்ஜுன் என்னை கட்டிப்பிடித்தார். முன்கூட்டியே எதுவும் சொல்லாமலே, என்னுடைய அனுமதி இல்லாமல், கட்டிப்பிடித்தவாறு என் முதுகில் அவருடைய கைகளால் மேலும், கீழும் தடவினார். என் உடலோடு மிகவும் நெருக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டார். 

          

உடனடியாக இயக்குநரிடம் இப்படியொரு காட்சி இருக்கிறதா எனக் கேட்டேன். பதில் இல்லை. நடப்பதை நினைத்து திகிலுற்றேன். சினிமாவின் இது யதார்த்தம் என்பதை உணர்ந்தேன். இது தவறு என்பதையும் உணர்ந்தேன். எனக்கு என்ன சொல்வதென்றேன் தெரியவில்லை. கோபமாகதான் இருந்தது. என்னுடைய இக்கட்டான சூழ்நிலையை இயக்குநரும் உணர்ந்திருந்தார். நடந்ததை நான் வேறு யாரிடமும் சொல்லவில்லை. மேக் அப் அறை டீமில் மட்டும் சொன்னேன்.   படப்பிடிப்பில் 50 பேர் முன்னிலையில் இந்தச் சம்பவம் நடந்தது. 

 

தன் மீதான புகாரை நடிகர் அர்ஜுன் மறுத்துள்ளார். இதுகுறித்து, “பல ஆண்டுகளாக நான் சினிமா துறையில் இருக்கிறேன். 60 முதல் 70 நடிகைகளுடன் நடித்துள்ளேன். ஒருவரும் இதுபோன்ற புகாரை கூறியதில்லை. அவர்கள் என்னை மதிக்கிறார்கள். இன்றும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்” என்றார் அர்ஜுன்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close