[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு

பெரும்பான்மையை நாளை நிரூபிப்போம்: எடியூரப்பா

we-are-going-to-prove-majority-bs-yeddyurappa

‘சட்டப்பேரவையில் நாளை நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம்’ என்று எடியூரப்பா நம்பிக்கைத் தெரிவிதுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக்கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இந் நிலையில், 104 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வந்த பாரதிய ஜனதா கட்சி தலைவர் எடியூரப்பாவை, ஆட்சி அமைக்குமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார். எடியூரப்பா பதவி ஏற்க எதிர்ப்புத் எதிர்த்து 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை கொண்டிருக்கும் மதசார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. 

விடிய விடிய 3 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து, எடியூரப்பா பதவி ஏற்க தடையில்லை என அறிவித்தது. மேலும் ஆட்சி அமைக்க உரிமை கோரி எடியூரப்பா ஆளுநரிடம் வழங்கிய கடிதத்தின் நகலை இன்று தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சட்டப்பேரவையில் எடியூரப்பா நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் கேட்டபோது, ‘ நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை 100 சதவீதம் நாளை நிரூபிப்போம்’ என்றார். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close