[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

vijay-mallya-has-left-india-centre-informs-sc

கிங்ஃபிஷர் நிறுவனத் தலைவர் விஜய் மல்லையா, இந்தியாவை விட்டு வெளியேறி விட்டதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ள விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கவும், அவரைக் கைது செய்யவும் உத்தரவிடக் கோரி 17 வங்கிகளின் கூட்டமைப்பு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நீதிபதிகள் குரியன் ஜோசப், நாரிமன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்ஜி ஜெனரல் முகுல் ரோகத்கி, சிபிஐயிடம் மல்லையா குறித்து விசாரித்தபோது அவர் கடந்த 2ம் தேதி நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.

கடன் ஏய்ப்பாளர் என்று தெரிந்தும் வங்கிகள் மீண்டும் மீண்டும் மல்லையாவுக்கு கடன் வழங்கியது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மல்லையாவை விரைவில் நாடு திரும்பச் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்ட நிலையில், மல்லையாவுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close