[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வராக இருப்பார் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்கிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS 2021ம் ஆண்டு அரசியலில் தமிழ் மக்கள் மிகப் பெரிய அதிசயத்தை, அற்புதத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் நிகழ்த்துவார்கள் - ரஜினிகாந்த்

தலாக் முறையை ரத்து செய்தால் மாற்று சட்டம் இயற்றுவோம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

talaq-law-rejection-new-law-will-be-created

முத்தலாக் முறையை செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தால் இஸ்லாமிய திருமணங்கள் மற்றும் விவாகரத்து தொடர்பாக புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோகத்கி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தலாக் குறித்த இன்றைய விசாரணையில், தலாக் நடைமுறை இஸ்லாமின் ஒரு அங்கமாக இருந்தால் அதனை தாங்கள் ரத்து செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. உச்ச நீதிமன்றம் அரசியல் சாசனத்திற்கு மட்டுமல்ல. சிறுபான்மையினருக்கும் பாதுகாவலாக திகழ்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

விவாதத்தில் பேசிய அரசு வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, திருமணம் மற்றும் திருமண முறிவு என்பது மதம் சார்ந்த விஷயமல்ல என்று வாதிட்டார். இஸ்லாம் மதத்தில் தலாக் கூறி மண முறிவு பெறும் வசதி ஆண்களுக்கு மட்டுமே உள்ளது, பெண்களுக்கு இல்லை என்றும் அவர் வாதிட்டார்.

அப்போது அவரிடம் நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர். முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டால் திருமணமான ஒரு இஸ்லாமியர் தனது மனைவியிடம் இருந்து மணவிலக்கு பெற சட்டப்படி மாற்று என்ன? என்ற கேட்டனர். இதற்கு பதிலளித்த முகுல் ரோஹத்கி, முத்தலாக் முறையை செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தால் இஸ்லாமிய திருமணங்கள் மற்றும் விவாகரத்து தொடர்பாக புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close