[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

மம்தா பானர்ஜியுடன் அமெரிக்க தூதர் சந்திப்பு

us-ambassador-to-india-richard-verma-meets-wb-cm-mamata

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாபானர்ஜியை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் சந்தித்துப் பேசினார்.

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ரிச்சர்ட் வர்மா கொல்கத்தாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாபானர்ஜியைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது இந்திய அமெரிக்க உறவு குறித்துப் பேசப்பட்டதாக ரிச்சர்ட் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவுக்கு மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ரிச்சர்ட் வர்மா, மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய அமெரிக்க உறவு பாதிக்காது எனக் கூறினார். ஊழலை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி முயற்சிக்கிறார் என்றும் இதனால் பொதுமக்கள் அடையும் சிரமங்களைப் புரிந்து கொள்ள முடிவதாகவும் கூறினார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துவதைப் புரிந்து கொள்ளும் அதே நேரம் அந்த நடவடிக்கையின் பொதுவான நோக்கத்தையும் புரிந்து கொள்கிறோம் என்று ரிச்சர்ட் வர்மா கூறினார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு கண்டனம் தெரிவித்த ரிச்சர்ட் வர்மா, எல்லை தாண்டிய பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும் அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close