[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

கறுப்புப்பணத்தை வெள்ளையாக மாற்றுபவர்களை தப்பிக்க விடமாட்டோம்.. சக்தி காந்த தாஸ்

we-will-not-allow-it-to-escape-money-laundering-people-shaktikanta-das

கறுப்புப்பணத்தை வெள்ளையாக மாற்றுப‌வர்கள் மற்றும் சட்ட விரோத பணப்பரிவர்த்தனையி‌ல் ஈடுபடுபவர்களை தப்பிக்க விட மாட்டோம் என பொருளாதார வி‌வகாரங்களுக்கான அமைச்சக செயலாளர் சக்திகாந்த தாஸ் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் விதமாக நாடெங்கும் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள பழைய செல்லாத நோட்டுகளை வங்கிகள் மூலம் டெபாசிட் செய்து வருகின்றனர்.

இதனிடையே, பணக்காரர்கள் ஏழைகளை பயன்படுத்தி கறுப்புப்பணத்தை வெள்ளையாக்குவதாகவும் புகார் எழுந்ததது. இந்நிலையில் கறுப்புப்பணத்தை வெள்ளையாக மாற்றுப‌வர்கள் மற்றும் சட்ட விரோத பணப்பரிவர்த்தனையி‌ல் ஈடுபடுபவர்களை தப்பிக்க விட மாட்டோம் என பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும், இது போன்ற சட்ட ‌விரோத செயல்களுக்கு துணை போகும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கறுப்புப்பணத்தை‌ ஒழிக்க அரசு அமைப்புகள் எடுத்து வரும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் நல்ல பலன் ‌தந்து வருவதாகவும், வரும் நாட்களில் பலன்கள் மேலும் தெளிவாக தெரியவரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close