[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

’பிரச்னைக்குப் பயந்து ஓடுவது எங்கள் வழியல்ல’...சைரஸ் மிஸ்த்ரிக்கு டாடா குழுமம் பதிலடி

tata-sons-hits-back-at-cyrus-mistry-for-making-malicious-allegations

பிரச்னைகளைக் கண்டு ஓடி ஒளிவது டாடா குழுமத்துக்குப் பழக்கமில்லை என்று சைரஸ் மிஸ்த்ரியின் குற்றச்சாட்டுகளுக்கு அந்த நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

டாட குழுமத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்த்ரி நீக்கப்பட்டார். மேலும், டாடா குழுமத்தின் இடைக்காலத் தலைவராக ரத்தன் டாடா இருப்பார் என்று டாடா குழுமம் தெரிவித்திருந்தது. டாட குழுமத்தில் தன்னை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை என்றும், தன்னை காரணமே இல்லாமால் நீக்கியுள்ளதாகவும் சைரஸ் மிஸ்த்ரி குற்றம்சாட்டியிருந்தார். டாடா குழும இயக்குனர்களுக்கு அவர் எழுதியிருந்த ரகசிய கடிதம் சமூக வலைதளங்களி வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்தநிலையில், சைரஸ் மிஸ்த்ரியின் குற்றச்சாட்டுகளுக்கு டாடா குழுமம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், பாரம்பரியமிக்க டாடா குழுமத்தின் இயக்குனர்கள் நீதிக்கு மாறாக எதையும் செய்யக் கூடியவர்கள் அல்ல என்று தெரிவித்துள்ளது. மேலும், குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்த்ரியை முறைப்படியே நீக்கியதாகவும் டாடா குழுமம் விளக்கமளித்துள்ளது.

அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் நம்பிக்கைக்குரிய டாடா குழுமத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முறையில் சைரஸ் மிஸ்த்ரி செயல்பட்டுள்ளதாகவும் டாடா குழுமம் குற்றம் சாட்டியுள்ளது. நிர்வாக இயக்குனர்களுக்கு ரகசியாமாக எழுதியிருந்த கடிதம் சமூக வலைதளங்களில் வெளியானது மன்னிக்க முடியா குற்றம் என்றும் டாடா குழுமம் தெரிவித்துள்ளது.

மேலும், நிர்வாக இயக்குனர்கள் மீது நம்பிக்கை இழந்தநிலையில் சைரஸ் மிஸ்த்ரி காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள டாடா குழுமம், கடந்த 2006ஆம் ஆண்டு முதல் குழுமத்தின் கீழ் இயங்கும் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த மிஸ்த்ரிக்கு நிர்வாக அமைப்பு குறித்து முழுமையாகத் தெரியும் என்றும் கூறியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close