[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

வாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழப்பு!

two-aged-persons-died-while-polling-their-votes

வாக்கு செலுத்த சென்ற இரண்டு முதியவர்கள் வாக்குச்சாவடியிலேயே மயங்கி விழுந்து இறந்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மக்களவை தேர்தலும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான  இடைத்தேர்தலும் காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், திரைப்பிரபலங்களும், பொது மக்களும் இளைஞர்களும் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் தங்கள் ஜனநாயக கடைமையாற்றி வருகின்றனர். தமிழக தேர்தல் ஆணையமும் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வாக்குப் பதிவு செய்ய சென்ற இரண்டு முதியவர்கள் வாக்குச்சாவடியிலேயே மயங்கி விழுந்து இறந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சிவகிரியில் அமைத்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து விட்டு வந்த முதியவர் முருகேசன், திடீரென மயங்கி விழுந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.  இதே போல சேலம் மாவட்டம், வேடப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த முதியவர் கிருஷ் ணன் என்பவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close