[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

உணவு பறிமாற காலதாமதமானதால் மனைவி சுட்டுக்கொலை

wife-shot-dead-for-serving-the-food-late

உத்தரபிரதேச மாநிலத்தில் உணவு பறிமாற மனைவி வேண்டுமென்றே காலதாமதம் செய்ததால் மனைவியை கணவன் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் கைசாபாத் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார். இவர் நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த உணவு பறிமாறும்படி மனைவி சுனிதாவிடம் கூறியுள்ளார். வீட்டில் உணவு இல்லாததால், உணவை தயாரிக்கும் பணியில் சுனிதா ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அவரிடம் தகராறில் ஈடுபட்ட அசோக் குமார், அவரை தாக்கியுள்ளார். இதன்பின்னும் ஆத்திரம் தீராத அவர், அறைக்குள்ளிருந்து கைத்துப்பாக்கி ஒன்றை கொண்டு வந்து சுனிதாவை நோக்கி சுட்டுள்ளார். இதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலே பலியானார். சத்தத்தை கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், தப்பியோட முயன்ற அசோக்குமார் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், உணவு வழங்காததற்காக அவர் சுட்டுக்கொல்லப்பட்டாரா அல்லது வேறு எதாவது முன்விரோதம் இருக்கிறதா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட அசோக்குமாருக்கு வயது 60 என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close