[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

“எனக்கு சம்பளம் தராமல் சிலர் ஏமாற்றினார்கள்” - சர்ச்சையாகும் தனுஷ் பேச்சு

some-cheated-without-paying-me-actor-dhanush

தேசிய விருது பெற்றவர், கோலிவுட் தொடங்கி பாலிவுட் கடந்து ஹாலிவுட் வரை‌ சென்றவர், நடிப்பு மட்டுமின்றி, பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர் தனுஷ். பெரும்பாலும் சர்ச்சைகளில் சிக்காத இவர், தயாரிப்பாளர்கள் குறித்து ஒரு கருத்தைச் சொல்லி அந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறார்.

வெற்றிக் கூட்டணியான வெற்றிமாறன் - தனுஷ் 4-வது முறையாக இணைந்துள்ள திரைப்படம் அசுரன். எழுத்தாளர் பூமணியின் 'வெக்கை' ‌நாவலே, இ‌ந்தக் கூட்டணியின் உழைப்பில் 'அசுரன்' ஆகியிருக்கிறது. இதன் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது, தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவை புகழ்ந்து பேசிய நாயகன் தனுஷ், ‌பல தயாரிப்பாளர்கள் தனக்கு சம்பளம் தராமல் ஏமாற்றியதாக ஒரு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தயாரிப்ப‌ளர்களை குற்றம்சாட்டியுள்ள தனுஷின் பேச்சு, இப்போது பேசுபொ‌ருளாகியுள்ளது. இதனிடையே தயாரிப்பாளரும், நடிகருமான ‌ஏ.எல். அழகப்பன், தனுஷூக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'துள்ளுவதோ இளமை' தொடங்கி 'வடசென்னை' வரை தனுஷை வைத்து படம் தயாரித்தவர்களில், எத்தனை பேர் தற்போது துறையில் இருக்கிறார்கள் என்று கோபமாக அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 'புதுப்பேட்டை' திரைப்படத்தை உதாரணம் காட்டும் ஏ.எல்.அழகப்பன், அதன் தயாரிப்பாளர்கள் தற்போது திரைப்படங்களைத் தயாரிப்பதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

‌அஜித்தும், விஜய்யும் தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் நடந்து கொள்வதாகவும், தனுஷால் யாரும் லாபமடையவில்லை என்று கூறும் ஏ.எல்.அழகப்பன், இதுபற்றி நேருக்கு நேர் விவாதிக்கவும் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close