[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

நிறைவேறுகிறது நடிகர் விவேக்-கின் நீண்ட நாள் ஆசை?

vivek-on-board-for-kamalhassan-s-indian-2

கமல்ஹாசனுடன் நடித்ததே இல்லை என்ற நடிகர் விவேக்கில் ஆசை, நிறைவேற இருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.

நடிகர் விவேக், தமிழில் சுமார் 130 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். முன்னணி ஹீரோக்கள் அனைவருடன் அவர் நடித்து விட்டார். ஆனால், கமல்ஹாசனுடன் மட்டும் சேர்ந்து நடிக்கவே இல்லை. இதுபற்றி அவரும் சில பேட்டிகளில் தெரிவித்து வந்தார். 

இந்நிலையில், அவரது ஆசையை இயக்குனர் ஷங்கர் தீர்த்து வைக்க இருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கு ம் 'இந்தியன் 2' படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது. கமல்ஹாசன் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

மற்றும் ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், வித்யூத் ஜாம்வால் உட்பட பலர்  நடிக் கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் விவேக் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இதுபற்றி விவேக் தரப்பில் விசாரித்தபோது, ‘’பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்னும் 2 நாட்களில் தெரியும்’ என்று தெரிவித்தனர்.

’இந்தியன்’ படத்தில் கவுண்டமணி - செந்தில் காமெடி பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close