[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

“தேர்தலில் வாக்காளராக மட்டுமே பங்கேற்பேன்” - நடிகர் கார்த்தி

i-will-participate-as-voter-only-in-election-actor-karthi

தேர்தலில் தான் ஒரு வாக்காளராக மட்டுமே பங்கேற்பதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து, தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. நாளையே வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள். வழக்கமாக பரப்புரைக்கு அரசியல் கட்சிகள் பிரபலமான நடிகர், நடிகைகளை பயன்படுத்தும். சில நடிகர், நடிகைகள் அரசியல் நேரங்களில் தாமாகவே சில அரசியல் கட்சிகளுக்கான பரப்புரைகளில் ஈடுபடுவார்கள். இதுமட்டுமின்றி சில சினிமா பிரபலங்கள் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான விளம்பரங்களிலும் ஈடுபடுவதுண்டு.

இந்நிலையில் தேர்தலில் தான் ஒரு வாக்காளராக மட்டுமே பங்கேற்க உள்ளதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் கார்த்தி, “ நான் இந்தத் தேர்தலில் பரப்புரையில் ஈடுபட உள்ளதாக சில தகவல்கள் வெளி வருகின்றன. உண்மையில் நான் பரப்புரையில் ஈடுபடவில்லை. நான் ஒரு வாக்காளராக மட்டுமே தேர்தலில் பங்குகொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close