[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

டி.வி. பிரபலத்தை கரம் பிடிக்கிறார் நடிகை ராக்கி சாவந்த்!

rakhi-sawant-to-tie-the-knot-dec-30

நடிகை ராக்கி சாவந்த் இந்தி டிவி, பிரபலம் தீபக் கலாலை டிசம்பர் 30ம் தேதி திருமணம் செய்கிறார்.

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் (வயது 40). கிளாமர் குயினான இவர் தமிழில், ’என் சகியே’, ’முத்திரை’ படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள் ளார். இந்தி, தெலுங்கு படங்களிலும் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். சமீபத்தில் நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா கூறிய பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பானது.

Read Also -> டிச.13-ல் நடிகை ஸ்வேதா பாசு -இயக்குனர் ரோகித் திருமணம்!

அதுகுறித்து பேசிய ராக்கி சாவந்த், தனுஸ்ரீ மீது பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறியிருந்தார். சண்டிகரில் நடந்த பெண்கள் குத்துச்சண்டை வளையத்துக்குள் தானாகச் சென்று வெளிநாட்டு வீராங்கனையால் தாக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார்.

இந்நிலையில் இந்தி டிவி பிரபலம், தீபக் கலால் (வயது 45) என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் ராக்கி சாவந்த். இவர்கள் திருமணத்துக்கான அழைப்பிதழையும் அதில் இணைந்துள்ளார்.

Read Also -> ’ஸீரோ’ படப்பிடிப்பில் தீ விபத்து: உயிர் தப்பினார் ஷாரூக் கான்!

’டிவி நிகழ்ச்சியில் நானும் தீபக்கும் சந்தித்தோம். இருவரும் பழகினோம். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாகச் சொன்னார். இதுதான் என் திருமணத்துக்கு சரியான தருணம் என நினைத்து சம்மதித்தேன். இதையடுத்து இரு வீட்டு குடும்பத்தினரும் பேசி திருமணத்தை முடிவு செய்துள்ளோம். எங்கள் திருமணம் டிசம்பர் 30 தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது.

Read Also -> நெல் பயிரிடும் விவசாயிகள் எப்படி கடனாளி ஆகிறார்கள்? - இந்த கணக்கீட்டை பாருங்கள்

திருமணத்தில் முன்னணி இந்தி திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள்’ என்று தெரிவித்துள்ளார் ராக்கி சாவந்த்.

புனேயை சேர்ந்த தீபக் கலால், டிவியில் பிரபலமாவதற்கு முன் முன்பு, மும்பையில் உள்ள மூன்று நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ரிசப்ஷனிஸ்ட் டாக பணியாற்றியுள்ளார்.

ராக்கி சாவந்த, கடந்த 2009-ல் டிவி சேனல் ஒன்று நடத்திய சுயம்வரம் நிகழ்ச்சியில் மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தார்.

Read Also -> சிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் ?

(சுயம்வர நிகழ்ச்சியில்...)

அதன்படி அந்த நிகழ்ச்சியில் 15 பேரில் எலிஸ் என்பவரைத் தேர்ந்தெடுத்தார். திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்தார் ராக்கி.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close