உதவி இயக்குநர் தற்கொலையால் சர்ச்சையில் சிக்கிய சின்னத்திரை நடிகை நிலானி, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரையில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த காந்தி என்ற லலித்குமார், சில தினங்களுக்கு முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். நடிகை நிலானி நெருக்கமாக பழகிவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலானி லலித்குமாரின் தற்கொலைக்கு தாம் காரணம் அல்ல என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விளக்கம் அளித்தார்.
இதுதொடர்பாக அவர் மீண்டும் பேட்டியளிப்பதாக தெரிவித்திருந்த நிலையில், வீட்டில் கொசு மருந்து குடித்து அவர் தற்கொலைக்கு முன்றதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்ட நிலானி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
‘பாலியல் வன்கொடுமை நடந்தபின் வா’ புகாரளிக்க வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய போலீசார்
டெல்லி தொழிற்சாலை தீ விபத்து: தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது
"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்" சுப்ரமணியன் சுவாமி
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் அறிவிப்பு
கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர் !