[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மதுரையில் இன்று அதிகாலை காய்ச்சலுக்கு கிருஷ்ணராஜ்(10) என்ற சிறுவன் உயிரிழப்பு
 • BREAKING-NEWS திருப்பதி அடுத்த மங்கலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டச் சென்றதாக தி.மலை சேர்ந்த இருவர் கைது
 • BREAKING-NEWS பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஷிங்கர் திரையரங்கம் அருகே உள்ள கட்டடத்தில் பெரும் தீ விபத்து
 • BREAKING-NEWS இணையதளத்தில் திருட்டுத்தனமாக படங்களை யாரும் பார்க்க வேண்டாம்; திரையரங்கில் பார்க்க வேண்டும் - விஷால்
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளித்து படிகாயமடைந்த இசக்கிமுத்துவை சந்தித்து ஆறுதல் கூறினார் திருமாவளவன்
 • BREAKING-NEWS பகுத்தறிவு என்று கூறி தமிழகத்தில் அடிப்படை அறிவை மழுங்கடித்துவிட்டார்கள்: ஹெச். ராஜா
 • BREAKING-NEWS பொருளாதார பிரச்னை குறித்து பேசுவோரை மதரீதியில் அடையாளப்படுத்துவது மோசமானது: கனிமொழி எம்.பி
 • BREAKING-NEWS சென்னையில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச். ராஜா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகார வழக்கில் விசாரணையை அக்.30ம் தேதிக்கு ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தவில்லை: ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு விளக்கம்
 • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
சினிமா 10 Aug, 2017 09:46 PM

தைரியம் தந்த விக்ரம்வேதா, மீசைய முறுக்கு... நம்பிக்கையுடன் ரிலீசாகும் திரைப்படங்கள்!

vikramvedha-courageous-voice-of-courage-hopefully-releases-movies

ஜி.எஸ்.டி, திரையரங்க கட்டண உயர்வு போன்றவற்றால் கடந்த சில வாரங்களாக அதிகளவிலான படங்கள் வெளியாகாமல் இருந்தன. இந்நிலையில், விக்ரம்வேதா, மீசைய முறுக்கு ஆகிய படங்களின் வெற்றி தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கையளித்துள்ளதால், இந்தவாரம் மூன்று முக்கியமான படங்கள் வெளியாகின்றன.

தனுஷ் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி-2 திரைக்கு வருகிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு கஜோல் ரீ எண்ட்ரி, சௌந்தர்யா ரஜினிகாந்தின் இயக்கும் முதல் திரைப்படம், உலகம் முழுக்க சுமார் 2000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியீடு என பல்வேறு சிறப்புகளோடு இப்படம் வெளிவருகிறது.

தங்கமீன்கள் படத்தைத் தொடர்ந்து ராம் இயக்கத்தில் உருவாகி, ஓராண்டுக்கும் மேலாக காத்திருந்த தரமணி இந்தவாரம் திரைக்கு வருகிறது. உலகமயமாக்கலுக்குப் பிறகான சமூக மாற்றங்களை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, வசந்த் நடித்துள்ளனர். மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் வரிகளும், யுவன்சங்கர் ராஜாவின் இசையும் 'தரமணி'க்கு கூடுதல் பலம்.

நகரப் பின்னணியிலான கதைக்களங்களில் மட்டுமே நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், முதல்முறையாக 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தில் கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார். அவரோடு, பார்த்திபனும் சூரியும் கூட்டணி அமைத்திருப்பதால் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ள 'பொதுவாக எம்மனசு தங்கம்' படம் மூலம் தளபதி பிரபு இயக்குநராக அறிமுகமாகிறார்.

தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கழிப்பறைகளின் முக்கியத்துவத்தோடு உருவாகியுள்ள திரைப்படம் 'டாய்லெட் ஏக் ப்ரேம் கதா.’ அக்ஷய்குமார் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படங்களுடன் பெரிதும் எதிர்பாரப்பை ஏற்படுத்தியுள்ள ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படமான 'எமோஜி’ படமும் ரிலீஸாகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close