[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முதல்வரின் அறிவிப்பில் உள்நோக்கம் இருக்காது என்றே நினைக்கிறேன்: திருமாவளவன்
  • BREAKING-NEWS ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய நிபந்தனைகள் ஏற்கப்பட்டுள்ளன: மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்படும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS மீண்டும் ஜேம்ஸ் பாண்ட்டாக களமிறங்கும் டேனியல் க்ரெய்க்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை
  • BREAKING-NEWS சேலம்: ஆத்தூரில் 5ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்தவர் கைது
  • BREAKING-NEWS ட்ரம்பின் ஒரே ஒரு ட்வீட்.... 5.7 பில்லியன் டாலரை இழந்த அமேசான்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை மையம்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் புதிய அணைகளை கட்டலாம்: உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து
  • BREAKING-NEWS டெல்லியில் ராஜ்நாத் சிங்குடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்திப்பு
  • BREAKING-NEWS உ.பி.யில் மேலும் 34 குழந்தைகள் பலி
  • BREAKING-NEWS மெரினாவில் நினைவேந்தல் நடத்திய வழக்கு- திருமுருகன் காந்தியின் காவல் ஆக.24வரை நீட்டிப்பு
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை வழக்கு- மறுவிசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு
  • BREAKING-NEWS நீட் அவசரச் சட்டம்- மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் விளக்கமளிக்க உத்தரவு
சினிமா 05 Aug, 2017 09:11 PM

அனுஷ்காவுடன் காதலா? பிரபாஸ் விளக்கம்!

love-with-anushka-description-of-prabhas

பாகுபலியில் இணைந்து நடித்த பிரபாஸுடன் அனுஷ்காவுக்கு காதல் எனவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன. 
பாகுபலி படத்திற்கு முன் இருவரும் இணைந்து நடித்து வந்தாலும் அப்படத்திற்கு பிறகுதான் இருவரும் காதலித்து வருவதாக பலமாக பேச்சு அடிபட்டு வருகிறது. பாகுபலி 2ம் பாகத்திற்குப் பிறகு பிரபாஸுக்கு இந்திய அளவில் பெண் ரசிகைகள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபாஸ் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரபாஸ், ’எனது பெண் ரசிகைகள் கவலையடைய தேவையில்லை.  தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமில்லை. அதைபற்றி யோசிக்கவும் இல்லை. பலரும் என் மீது அக்கறையாக இருப்பது எனது அதிர்ஷடம் என உணர்கிறேன்’ என்றவரிடம் அனுஷ்காவுடன் காதல் எனப்பேசப்படுகிறதே எனக்கேட்டால், ‘இது இட்டுக்கட்டப்படும் கதை. இப்படி கிசுகிசுக்கள் கிளம்பும் என்பது எனக்கும் தெரியும். ஒரு நடிகரும், நடிகையும் ஓரிரு படங்கள் இணைந்து நடித்தாலே அவர்களுக்குள் காதல் என வதந்தி வருவது வாடிக்கையாகி விட்டது. இது மோசமான செயல். எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில் எப்படி இப்படி எல்லாம் எழுதுகிறார்கள் என்பது புரியவில்லை. இந்த வதந்தியை  கிரகித்துக் கொள்ளும் பக்குவம் எனக்கு இப்போது வந்துவிட்டது’’ என்கிறார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close