[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றுள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது - கே.எஸ்.அழகிரி
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே; மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யபப்டுவதும் இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல்

மறுமணம் செய்கிறேனா? இயக்குனர் விஜய் மறுப்பு

do-i-remarry-director-vijay-disclaimer

மறுமணம் செய்ய இருப்பதாக வந்த தகவலை இயக்குனர் விஜய் மறுத்துள்ளார்.

தமிழில், அஜீத் நடித்த ’கிரீடம்’, விக்ரம் நடித்த ’தெய்வத் திருமகள்’, ’தாண்டவம்’, விஜய் நடித்த ’தலைவா’உட்பட சில படங்களை இயக்கியவர் விஜய். இப்போது ஜெயம் ரவி நடிக்கும் ’வனமகன்’ என்றப் படத்தை இயக்கி வருகிறார். இவரும் நடிகை அமலா பாலும் காதலித்து 2014-ம் வருடம் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக கடந்த வருடம் விவாகரத்துப் பெற்றனர். இந்நிலையில் இயக்குனர் விஜய், ஒரு மலையாள நடிகையை காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் மறுமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.

இதை மறுத்துள்ள இயக்குனர் விஜய் கூறியதாவது: சமீப நாட்களாக, சில ஊடகங்களில் எனக்கு மறு திருமணம் நடக்க இருப்பதாக ஜோடிக்கப்பட்ட வதந்திகள் பரவி வருகிறது. இது போன்ற ஆதாரமற்றச் செய்திகள் என்னை வருத்தப்பட வைக்கிறது. என் வளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றி வரும் ஊடக நண்பர்களிடம், இது போன்ற வதந்திகளைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிற தார்மீக உரிமை எனக்கு இருக்கிறது. தரமான திரைப்படங்களை வழங்க வேண்டும் என்பதே என் கடமை. அதை முழு மனதோடு நிறைவேற்றுவேன்.இவ்வாறு இயக்குனர் விஜய் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close