[X] Close

டி20 உலக கோப்பை தொடரை எந்த மைதானங்களில் நடத்தலாம்? - ஐசிசிக்கு பட்டியல் அனுப்பிய பிசிசிஐ

விளையாட்டு

BCCI-Sent-the-Nine-Venues-List-to-host-ICC-Men-s-T20-Cricket-World-Cup-2021-in-India

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடரை இந்த 9 மைதானங்களில் நடத்தலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் மைதானங்களின் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்பி உள்ளது பிசிசிஐ.

16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரை அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ மற்றும் மும்பை மைதானங்களில் நடத்தலாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளதாம். இருப்பினும் இறுதி முடிவை ஐசிசி எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இந்த மைதானங்களை ஐசிசி குழு நேரில் வந்து ஆய்வு செய்து அதன் பிறகு முடிவை எடுக்கும் எனத் தெரிகிறது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close